Categories: Cinema News idli kadai latest cinema news latest news இட்லி கடை தனுஷ்

Dhanush: திணறும் தமிழ் சினிமா… தனுஷின் இட்லி கடை மீது குறி வைக்கும் தயாரிப்பாளர்கள்… என்ன நடக்கும்?

Dhanush: நடிகர் தனுஷ் நடித்து தயாரித்து இருக்கும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவே தற்போது அப்படத்தின் மீது கண் வைத்து இருக்கிறது. 

ரசிகர்களும், சமூக வலைத்தள பிரச்னையும்

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ரசிகர்கள் சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பார்கள். பிடித்தால் தங்கள் உறவினர்களுக்கு சொல்ல என வாய் மொழியாக படம் ஹிட் அடிக்கும். சோஷியல் மீடியா காலம் வந்த பின்னர் ஒரு படத்திற்கு அதுவே பிரச்னையாகி இருக்கிறது. 

ஒரு படம் ரிலீஸாகி சில நிமிடங்களில் அதன் பல முக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு விடுகிறது. அதிலும் இயக்குனர்கள் தங்கள் படங்களின் பிளஸாக இருக்கும் என நினைக்கும் சீன்கள் கூட கசிந்து அதிர்ச்சி கொடுக்கிறது. 

இதனால் முதல் நாள் தவிர மற்ற நாட்களில் படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு பெரிய அளவில் சர்ப்ரைஸ் இல்லாமல் போவதால் படத்தின் வசூலும், வரவேற்பும் அடி வாங்கிறது. அதுமட்டுமல்லாமல் கதையை பார்த்து வரவேற்பு கொடுத்த ரசிகர்கள் தற்போது வசூலை கணக்கு பார்க்க தொடங்கி ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கின்றனர். 

இப்படிப்பட்ட சூழலில் படத்தின் வெற்றி பல வகைகளில் அடி வாங்கிக்கொண்டு இருக்கிறது. அதிலும் இந்த வருட தொடக்கத்தில் இருந்தே பெரிய இயக்குனர்களின் படங்கள் அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களை அதிகமாக சந்தித்து வருகிறது. 

சரிவை நோக்கும் டாப் இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்கள் என்ற லிஸ்ட்டில் இருந்த மணிரத்னம் தொடங்கி சமீபத்திய லோகேஷ் கனகராஜ் வரை பலரும் தங்களுடைய படங்களில் தோல்வியை தழுவி இருப்பது கோலிவுட் சினிமாவின் வீழ்ச்சியை காட்டுகிறது. 

அதிலும் எந்த விதத்திலும் தோல்வியை சந்திக்காத லோகேஷ் கனகராஜின் கூலி படம் பெரிய அளவில் பிரச்னையை சந்தித்தது. இதுவே இந்த ஆண்டு பல ஆயிரம் கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கோலிவுட்டுக்கு பிரச்னையாக மாறி இருக்கிறது. 

idli kadai

இந்நிலையில் இட்லி கடை படம் அக்டோபர் 1ந் தேதி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதனால் கோலிவுட்டின் டாப் இயக்குனர்கள் வீழ்ந்துவிட்ட நிலையில் தற்போது தனுஷ் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தாழ்ந்து சென்று இருக்கும் கோலிவுட்டை இப்படம் தான் காப்பாற்றும் நிலைக்கு வந்துள்ளது. 

அதிலும் இப்படத்தால் பெரிய நடிகர்களின் படங்கள் வசூலை குறி வைக்கும் கதையில் கோட்டை விடும் என்ற நம்பிக்கையும் உடைக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனாலே இப்படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்து இருக்கிறது. 

இந்த படத்தில் தனுஷின் கேரக்டர் பெரிய அளவில் வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருக்கிறதாம். இது ஒரு எமோஷனல் படம் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இதற்கான முடிவு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Published by
ராம் சுதன்