Connect with us

Cinema News

வெளிநாட்டுக்கு பறக்கும் இட்லி கடை!… ஹெலிகாப்டர் சீன் வேறயா… தனுஷ் போடும் மாஸ்டர் பிளான்…!

தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை திரைப்படத்தை வெளிநாடுகளில் படமாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். முதலில் ஒரு நல்ல ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட நடிகர் தனுஷ் தொடர்ந்து தயாரிப்பாளர், பாடகர் அந்த வரிசையில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

2012 ஆம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதன் முதலாக பவர் பாண்டி என்கின்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா ஜெபஸ்டின் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். தொடர்ச்சியாக தமிழில் பல நல்ல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.

ராயன் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உலக அளவில் சுமார் 170 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தை சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதற்கு அடுத்ததாக நடிகர் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் தனுஷ் தான் இயக்க இருக்கும் நான்காவது திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த திரைப்படத்திற்கு அவர் இட்லி கடை என்று பெயர் வைத்திருக்கின்றார். இந்த படத்தை தவான் பிக்சர் என்கின்ற நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இந்த திரைப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிவு அடைந்த நிலையில் இரண்டாவது ஷெட்யூலை வெளிநாடுகளில் படமாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. முதலில் இந்த திரைப்படத்தை துபாயில் எடுப்பதற்கு முடிவு செய்திருந்தனர்.

ஆனால் தற்போது தாய்லாந்து, ஜப்பான் போன்ற இடங்களில் இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும், மேலும் அங்கு ஒரு பெரிய மாலிலும் ஹெலிகாப்டரை வைத்து சில காட்சிகளை எடுப்பதற்கு தனுஷ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. தீபாவளிக்கு சற்று பிரேக் எடுத்துக்கொண்டு ஓரிரு வாரங்கள் கழித்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top