தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்த தனுஷ் ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார் உருவ கேலிக்கும் ஆளானார் .ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு இன்று நடிப்பில் அசுரனாக திகழ்ந்து வருகிறார் தனுஷ்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் படங்களை இயக்கி வருகிறார் .அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ராயன் .அந்த படத்தை பார்க்கும் பொழுது ஒரு படைப்பாளியாகவும் அவருக்குள் இருக்கும் திறமை அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார் .அந்த படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
மேலும் இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அந்த படத்தில் அவருக்கு வில்லனாக அருண் விஜய் நடித்திருக்கிறார். அதுபோக தெலுங்கில் குபேரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படி அவருடைய லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் இருக்க சமீபத்தில் நடிகர் தனுஷ் டெல்லி சென்று இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதற்கு பின்னணியில் உள்ள காரணமும் வெளியாகி இருக்கிறது.
அவர் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது .அது சம்பந்தமாக தான் டெல்லியில் உள்ள இயக்குனர் ஆனந்த் எல் ராயை சந்திப்பதற்காக அவர் சென்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது. ஏனெனில் அவர் சமீப காலமாக இயக்கும் படங்கள் பெரும்பாலும் பர்ஸ்ட் காபி என்ற அடிப்படையில் தான் இயக்கி வருகிறார்.
அதனால் அவருக்கு பினான்சியல் ஆக பணம் தருவதற்கு இங்குள்ள தயாரிப்பாளர்களோ வேறு எந்த நிறுவனமோ அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முன்வரவில்லை என்றும் அது சம்பந்தமாகவே அந்த இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இளையராஜா பயோபிக் படத்தைக் கூட இவர்களை வைத்துதான் தனுஷ் தயாரிக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…