Kubera: முடிவா சொல்லுங்கப்பா!... குபேரா தமிழ் படமா? இல்ல தெலுங்கு படமா?... வெளியான அப்டேட்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:11  )

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது பாடகர், தயாரிப்பாளர் அந்த வரிசையில் இயக்குனராகவும் தொடர்ந்து அசத்தி வருகின்றார் நடிகர் தனுஷ். தமிழ் மட்டும் இல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ராயன். தனது 50 திரைப்படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்து இருக்கின்றார் .

சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 100 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் உருவாக இருக்கும் நான்காவது படமான இட்லி கடை திரைப்படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டு வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தனுஷின் 51 வது படமாக வெளியாக உள்ள குபேரா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றது.

வரும் நவம்பர் 15ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குபேரா படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தை வரும் டிசம்பர் 27ஆம் தேதி அதாவது பொங்கலுக்கும் முன்பாக வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்கள். தற்போது ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வி குபேரா திரைப்படம் தமிழ் படமா? அல்லது தெலுங்கு படமா? என்று தான். பலரும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருப்பதாக கூறி வந்தார்கள்.

ஆனால் அப்படி இல்லையாம் அந்த படத்தின் பட குழுவினரே இது தொடர்பாக தெரிவித்த போது படத்தை தமிழ் மொழி மற்றும் தெலுங்கு மொழி இரண்டிலும் படமாக்கப்பட்டிருப்பதாகவும், மற்ற மொழிகளில் மட்டுமே டப்பிங் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு படம் என்று கூறி விட முடியாது.

தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் இந்த திரைப்படத்தை எடுத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story