Categories: Cinema News

Dhanush: எஸ்.கே கூட போனா விட்ருவமா?!.. தனுஷ் போட்ட ஸ்கெட்ச்!.. அமரன் இயக்குனரை தூக்கிட்டாரே!…

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். ஏற்கனவே கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கின்றார். இது இல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். அடுத்ததாக தான் இயக்கும் நான்காவது படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார். இந்த படத்திற்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படி மிக பிஸியாக சுற்றி வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக அமரன் திரைப்படத்தின் இயக்குனருடன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சிவகார்த்திகேயனை வைத்து அமரன் திரைப்படத்தை இயக்கிய மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான இப்படம் சக்க போடு போட்டு வருகின்றது.

பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 170 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு பேரும் புகழும் கிடைத்ததோ அதே அளவுக்கு பிரபலமாகி இருக்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழ் சினிமாவை சேர்ந்த பெரிய பெரிய ஜாம்பவான்களும் அவரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

ராஜ்குமார் பெரியசாமிக்கு ஏற்கனவே கலைப்புலி எஸ் தாணு மற்றும் மதுரை அன்பு என இரண்டு தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் நடிகர் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கின்றது.

நடிகர் சிவகார்த்திகேயனும் தனுஷும் மிகச்சிறந்த நண்பர்கள் சொல்லப்போனால் தனுஷ் மூலமாகத்தான் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் தற்போது இருவரும் எதிரெதிர் துருவங்களாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்குள் சண்டை இல்லை என்று கூறிக் கொண்டாலும் சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றது.

சிவகார்த்திகேயனை வைத்து ராஜ்குமார் பெரியசாமி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்ட காரணத்தால் அவரை தற்போது தன் பக்கம் இழுத்து இருக்கின்றார் நடிகர் தனுஷ். இது ஒரு புறம் இருக்க அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அமரன் திரைப்படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி ஆறு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். அடுத்த திரைப்படத்திற்கு எப்படியும் அந்த சம்பளம் அதிகமாகும் என்று கூறப்படுகின்றது. ஒருவேளை டபுள் மடங்காகும் பட்சத்தில் அதனை மதுரை அன்பு கொடுப்பதற்கு முன் வருவாரா? என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது.

Published by
ராம் சுதன்