100 கோடி வசூல்லாம் சும்மா!.. தனுஷ்கிட்ட ஒழுக்கம் இல்ல!.. போட்டு பொளக்கும் பிரபலம்!...
சமீபத்தில் தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷுக்கு இது 50வது படம். அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். பவர் பாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு அவர் இயக்கும் இரண்டாவது படமாக ராயன் திரைப்படம் அமைந்திருக்கிறது.
படத்தை பொறுத்தவரைக்கும் படம் முழுக்க வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக பல மூத்த பிரபலங்கள் கூறி வருகிறார்கள் .ஆனால் இளைஞர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் 100 கோடி வசூலை பெற்றிருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகின்றன. இது உண்மையா என தயாரிப்பாளர் கே. ராஜனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த கே.ராஜன் ‘100 கோடி வசூல் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் படம் ஆவரேஜ் என்றுதான் கூறி வருகிறார்கள். ஆனால் நான் படம் பார்க்கவில்லை. விமர்சனம்தான் பார்த்தேன். கதை சுமாராக இருப்பதாக சொல்கிறார்கள்.’
‘மேலும் இவர்கள் மிகைப்படுத்துவதற்காகவே இப்படியெல்லாம் கூட சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே 100 கோடி என்றால் எனக்கு சந்தோஷம் தான். அதுமட்டுமில்லாமல் தமிழில் வசூல் குறைவு என்றுதான் சொல்கிறார்கள். அதற்கு காரணம் தனுஷ் மீது ரசிகர்களுக்கு நல்ல அபிப்ராயமே கிடையாது.’ என கே.ராஜன் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது தனுஷ் நல்ல ஒழுக்க நெறியுடன் குடும்பம்,குழந்தைகளுடன் சேர்ந்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தால் அவரை பின்பற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் மரியாதை கூடும். அது சினிமா கெரியருக்கும் அவருக்கு ஒரு விதத்தில் உதவும். இதுதான் தனுஷ் மீதான என்னுடைய வருத்தம்.
மற்ற படி அசுரன் மற்றும் கர்ணன் படத்தில் இருந்தே தனுஷ் மீது எனக்கான மரியாதை அதிகமாகிவிட்டது. அவர் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் என்பதை அந்த இரு படங்கள் மூலம் நிரூபித்துவிட்டார். இன்னும் அவர் மென்மேலும் வளர் ஒழுக்க நெறியுடன் இருந்தாலே போதும் என கே.ராஜன் கூறியிருக்கிறார்.