தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பட்டத்துடன் வலம் வந்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. ஆனால் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வி அடைந்தது.
தொடர்ந்து இந்த திரைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் ட்ரோல் செய்து வந்தார்கள். இதனால் நொந்து போன ஷங்கர் அடுத்த படம் சிறந்த கம்பேக்காக இருக்க வேண்டும் என்ற முயற்சியுடன் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கினார். தெலுங்கில் நடிகர் ராம்சரண், கியரா அத்வானி, எஸ் ஜே சூர்யா ஆகியோரை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
படம் கிட்டதட்ட 450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். மேலும் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்தியன் 2 திரைப்படத்தை போலவே கேம் சேஞ்சர் திரைப்படமும் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த காரணத்தால் படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் 200 கோடி ரூபாய் கூட வசூல் செய்திருக்காது என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்தே மீண்டு வராத தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வந்தது.
அதாவது தெலுங்கு சினிமாவில் பல முன்னணி புரடியூசர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டில் ஈடுபட்டார்கள். அந்த வகையில் தில் ராஜு அவர்கள் வீடு, அலுவலகம் மற்றும் மனைவி வீடு என அனைத்திலும் சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வந்து இருக்கின்றது.
அதாவது தயாரிப்பாளர் தில்ராஜு அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் நீலை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இந்த திரைப்படத்தில் ஒரு பெரிய நடிகரை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் படம் 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகின்றது. இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷங்கர் வைத்த ஆப்பில் இருந்தே இன்னும் மீளவில்லை அதுக்குள்ள அடுத்த இயக்குனரா? என்று தில் ராஜூவை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…