தனுஷ் சொன்னதுதான் நடந்துச்சு! இத்தனை வருஷமா டைரக்டரா இருந்து என்ன யூஸ்? புலம்பிய இயக்குனர்
இன்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் அன்பில் நனைந்து வருகிறார் தனுஷ். அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் ஆஹா ஓஹோனு பாராட்டி வருகிறார்கள். வடசென்னை 2 கேட்டோம். புதுப்பேட்டை 2 கேட்டோம். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி பெருசா தனுஷ் செஞ்சிட்டாரு என ரசிகர்கள் புகழ்ந்துவருகின்றனர்.
தனுஷுக்கு 50 வது படமாக இந்த ராயன் திரைப்படம் அமைந்திருக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் போன்ற பல பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். எப்போதும் போல் ஹீரோவுக்கு இணையான ஒரு வரவேற்பை இந்தப் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா பெற்றிருக்கிறார். வில்லனாக நடித்து படு மாஸ் காட்டியிருக்கிறார்.
இது ராயன் திரைப்படமே இல்லை. ராவணன் திரைப்படம் என பார்த்த அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். ராவணனுக்கு எப்படி இரு சகோதரர்கள் , ஒரு சகோதரியோ அதை போல் இந்தப் படத்திலும் ஒரு ராவணனாக தனுஷ் நிற்கிறார் என பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான அமீர் தனுஷை பற்றி கூறியது இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இருவரும் சேர்ந்து வடசென்னை படத்தில் நடித்திருந்தார்கள். அந்த நேரத்தில் அதாவது படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் அமீருக்கு போன் செய்த தனுஷ் ‘என்ன நாளைக்கு உங்க படம் வருது போல’ என கேட்டாராம்.
அதற்கு அமீர் ‘என்னது என் படமா? விளையாடதீங்க. அது உங்க படம்ங்க’ என சொன்னாராம் அமீர். சரி நாளைக்கு படம் வரட்டும். இரவு போன் செய்கிறேன் என சொல்லிவிட்டு தனுஷ் போனை வைத்துவிட்டாராம்.
அவர் சொன்னதை போல படத்தின் முதல் பாதி முழுவதுமாக ராஜன் கதாபாத்திரத்தில் என்னை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். தனுஷ் சொன்னதை போல என் படமாகவே மாறியது. ஒரு டைரக்டராக என்னால கூட அதை கணிக்க முடியலை. நடிகராக மட்டுமில்ல. சினிமாவை பற்றி எல்லாவற்றையும் கறைத்து குடித்தவர் தனுஷ் என அமீர் ஒரு பேட்டியில் கூறினார்.