Categories: latest news

ரிலீஸுக்கு முன்பே என் நம்பிக்கையை உடைக்க நினைச்சாங்க… மனம் நொந்த டிராகன் இயக்குனர்

டிராகன் படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் யதார்த்தமான நடிப்பு படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம். ஏற்கனவே லவ் டுடே படத்தின் தன்னோட திறமையை நிலைநாட்டியவர்.

வித்தியாசமான கதைக்களம்: டிராகன் படத்தின் வித்தியாசமான கதைக்களம் தான் சின்ன பட்ஜெட்டில் தயாரானாலும்கூட ரசிகர்களைக் கவர்ந்து இழுத்துள்ளது. படத்தில் என்ன விசேஷம் என்றால் முதல் நாளின் வசூலை விட 9 மற்றும் 10ம் நாள்களின் வசூல் அனைவரையும் அதிரச் செய்துள்ளது. முதல் நாளில் இந்திய அளவில் 6.5கோடிதான்.

பிளாக்பஸ்டர்: ஆனால் 9ம் நாளில் 8.5கோடி. 10ம் நாளில் 9கோடி வசூல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் படம் அந்தளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆகியுள்ளது. உலகளவில் 100கோடியை எட்டியது. இதை பிளாக்பஸ்டர் என பாக்ஸ் ஆபீஸில் அறிவித்தனர். இந்த நிலையில் டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மனம் நொந்துபோய் உருக்கமாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

நம்பிக்கையை உடைக்க நினைத்தனர்: டிராகன் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கும், அன்புக்கும் நன்றி. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சிலர் என் நம்பிக்கையை உடைக்க நினைத்தனர். ஆனால் ‘நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்’ என்று கூறிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் உள்ள சில தவறுகளை திருத்திக் கொண்டு எனது அடுத்த படத்தை நிச்சயமாக இன்னும் சிறப்பாக கொடுப்பென் என்று பேசியுள்ளார்.

டிராகன்: கடந்த பிப்ரவரி 21ம் தேதி டிராகன் படம் வெளியானது. கல்பாத்தி அகோரம் குழுவினர் தயாரித்துள்ளனர். படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் அனுபமா பரமேஸ்வரன், காயடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன் என 3 இயக்குனர்களும் நடித்துள்ளனர்.

படத்தில் பிரபல தயாரிப்பாளர் பிஎல்.தேனப்பனும் நடித்துள்ளார். உள்பட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இன்னும் ரசிகர்களின் வரவேற்பில் கொஞ்சம் கூட குறையில்லாமல் டிராகன் திரையரங்குகளை ஹவுஸ்புல்லாக்கி வருகிறான்.

sankaran v

Recent Posts

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

28 minutes ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

50 minutes ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

7 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

10 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

11 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago