4 கோடி மதிப்பில் அட்லீ வைத்து இருக்கும் வாட்ச் இதுதான்...! மெர்சலா இருக்கே!

by sankaran v |
4 கோடி மதிப்பில் அட்லீ வைத்து இருக்கும் வாட்ச் இதுதான்...! மெர்சலா இருக்கே!
X

2013ல் ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் அட்லீ தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

உதவி இயக்குனர்: 2023ல் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற இந்திப் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார். இது பெரும் வெற்றியைக் கொடுத்தது. ஆரம்பத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார். நண்பன், எந்திரன் ஆகிய படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடித்த பொருள்: அந்த வகையில் இளம் இயக்குனரான அட்லிக்கு பிடித்தமான ஒரு பொருள் என்ன? அதை எவ்வளவு தொகையில் வாங்கி வைத்திருக்கிறார்னு பாருங்க. ரொம்பவே ஆச்சரியமா இருக்கும். சிலருக்கு ஒரு சில பொருள்கள் வாங்குவதில் ரொம்பவே ஆசை இருக்கும். ஒரு சிலர் டிரஸ் விதவிதமாகப் போடணும்னு நினைப்பாங்க.

வாட்ச் பிரியர்: இன்னும் ஒரு சிலருக்கு விதவிதமான நகையை அணிவது பிடிக்கும். இன்னும் ஒரு சிலர் டிரஸ்சுக்கு ஏற்ப மேட்சிங்கா பேக், பர்ஸ், வாட்ச், சப்பல்னு போட ஆசைப்படுவாங்க. அந்த வகையில் இயக்குனர் அட்லீ ஒரு வாட்ச் பிரியர்.

8 கோடி: இவருக்கு வாட்ச் என்றாலே கொள்ளை பிரியமாம். இவர் வைத்திருக்கும் வாட்ச் கலெக்ஷன் விலை மட்டும் கிட்டத்தட்ட 8 கோடியாம். இவர் வைத்து இருக்கும் வாட்சில் மிகவும் அதிக விலை கொண்ட வாட்ச் எது தெரியுமா?

ரிச்சர்ட் மைல் ஆர் எம் 65-01 என்ற வாட்ச் தானாம். மொத்தமே 120 வாட்ச்கள் மட்டும் தயாரிக்கப்பட்டநிலையில் இவருக்கும் அந்த வாட்ச் கிடைத்துள்ளது. இந்த வாட்ச்சின் விலை எவ்வளவுன்னு தெரியுமா? கிட்டத்தட்ட 4 கோடியாம். அடேங்கப்பா இப்பவே தலை சுற்றுதா? ரிலாக்ஸா இருங்க.

Next Story