Vanangaan: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் பாலா. இவர் பாலுமகேந்திராவின் சிஷ்யர்களில் ஒருவர். மிகவும் கஷ்டப்பட்டு முதல் படத்தை இயக்கினார். முதலில் அகிலன் என்கிற தலைப்பில் இப்படத்தை இயக்கவிருந்தார். விக்னேஷ், அஜித், முரளி என பலரிடமும் கதை சொல்லப்பட்டது. இதில், முரளி மட்டுமே நடிக்க சம்மதித்தார். ஆனாலும் அது நடக்கவில்லை.
அதன்பின்னர்தான் விக்ரம் உள்ளே வந்தார். தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்புக்காக காத்திருந்த விக்ரமுக்கு சேது படம் கை கொடுத்தது. அந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து, மொட்டை போட்டு உடம்பை வறுத்தி நடித்திருந்தார். இந்த படத்தின் டிராஜடி கிளைமேக்ஸ் ரசிகர்களை உலுக்கியது. இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு உதவியது.
படம் ஹிட் அடிக்கவே பாலா பேசப்பட்டார். சேது படத்தை பார்த்துவிட்டு பாலாவை நேரில் போய் சந்தித்து ‘எனக்கும் ஒரு படம் பண்ணி கொடுங்க’ என கோரிக்கை வைத்தவர்தான் சூர்யா. அப்படி உருவான படம்தான் நந்தா. இந்த படத்தில்தான் சூர்யா நடிப்பு என்றால் என்ன என கற்றுக்கொண்டார்.
எப்படி சிகரெட் பிடிப்பது?.. எப்படி பார்க்க வேண்டும்?.. எப்படியெல்லாம் நடிக்க வேண்டும்?. என எல்லாவற்றையும் இந்த படத்தில் சூர்யாவுக்கு சொல்லி கொடுக்கப்பட்டது. இந்த படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டது. இந்த படத்தை பார்த்துவிட்டுதான் கவுதம் மேனன் காக்க காக்க படத்தில் சூர்யாவை நடிக்க வைத்தார்.
இதை வணங்கான் இசை வெளியீட்டு விழாவிலேயே சூர்யா சொல்லி இருந்தார். அதேபோல், சூர்யாவால் காமெடியும் செய்ய முடியும் என பிதாமகன் படத்தில் காட்டினார் பாலா. பிதாமகன் படத்தில் நடித்தபோது ஒரு முழு நடிகராகவே மாறி போயிருந்தார் சூர்யா. இப்படி சூர்யாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாலா. ஆனால், அதே சூர்யா பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு அந்த படத்திலிருந்து விலகினார்.
பாலா முழுக்கதையும் சொல்ல மாட்டார். கதையை முழுவதுமாக முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வரும் பழக்கமும் அவருக்கு இல்லை. அதோடு, ஒரே காட்சியை திரும்ப திரும்ப எடுப்பார் என பொதுவாக சொல்வார்கள்., அதோடு, வணங்கான் படப்பிடிப்பில் சூர்யாவை பல முறை ஓட வைத்து காட்சிகளை அவர் எடுத்ததால்தான் அந்த படத்திலிருந்து சூர்யா விலகியதாக அப்போது செய்திகள் வெளியானது. அதன்பின் இந்த படத்தில் அருண் விஜய் நடித்தார். இப்போது படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. அதேநேரம், வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்துகொண்டு பாலாவை வாழ்த்தி பேசினார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பாலா ‘வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார் என்பது உண்மை இல்லை. இந்த படத்தில் பொது இடங்களில் நிறைய காட்சி எடுக்க வேண்டியிருந்தது. சூர்யாவை வைத்து அப்படி எடுக்க முடியாது. அதனால்தான் இருவரும் பேசி அந்த முடிவை எடுத்தோம்’ என விளக்கமளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…