பாலாஜி சக்திவேலின் இத்தனை திரைப்படமும் நெகட்டிவ் கிளைமேக்ஸா? ஆத்தாடி!
Balaji Sakthivel: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக இருந்த பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான பெருவாரியான திரைப்படங்களுக்கு நெகட்டிவ் கிளைமாக்ஸ் மட்டும்தான் என்பது குறித்த ஆச்சரிய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் பாலாஜி சக்திவேல். குறைந்த அளவு திரைப்படங்களை இவர் இயக்கியிருந்தாலும் எல்லாமே மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்திருக்கிறது. அப்படி இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் விக்ரம் நடிப்பில் சாமுராய்.
சேது திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் ஆலயம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்ரம் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் கிட்டத்தட்ட சிட்டிசன் படத்தைப் போல சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. ஹரிஷ் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது.
இருந்தும் படத்தின் கிளைமாக்ஸ் நெகட்டிவாக அமைய ரசிகர்களிடம் படம் பெரியளவு ஹிட் கொடுக்கவில்லை. இப்படத்தை தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய முக்கிய திரைப்படம் தான் காதல். சந்தியா மற்றும் பரத் இருவரின் சினிமா காரியாரை தூக்கின நிறுத்தியதில் இப்படத்திற்கு தனி பங்கு உண்டு.
இப்படத்திற்கு மிகப்பெரிய நட்சத்திரம் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பலரும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காரணம் காட்டி நடிக்க முடியாமல் விலகி இருக்கின்றனர். முதலில் இத்திரைப்படத்திற்கு எஸ் முருகன் ஆர் ஐஸ்வர்யா என்ற தலைப்பு தான் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த நேரத்தில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் பிரியாணி ஹிட்டு அடிக்க டைட்டிலை காதல் என மாற்றி இருக்கின்றனர். கொடூரமான நெகட்டிவ் கிளைமாக்ஸாக இருந்தும் படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. பல தயாரிப்பாளர்கள் தயாரிக்க தயங்க இயக்குனர் சங்கர் தயாரிப்பில் இப்படம் உருவானது.
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த திரைப்படம் கல்லூரி. நடிகை தமன்னாவின் திரை வாழ்கையில் முக்கிய படமாக இன்னமும் இடம்பெற்று இருக்கிறது. இறுதியாக மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம் கிளைமாக்ஸ் ஆக அமையும் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்தது.
இப்படம் பாலாஜி சக்திவேலுக்கு சிறந்த எழுத்துக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றுக் கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9. இவருடைய கேரியரின் உச்சம் என்றே சொல்லலாம். படத்தில் மிக முக்கியமான சென்சிட்டிவ் விஷயங்கள் பேசப்பட்டிருக்கும். நெகட்டிவ் கிளைமாக்ஸ் என்றாலும் தமிழ் சினிமாவில் முக்கிய படைப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த பாலாஜி சக்திவேல் வெற்றிமாறனின் ஆசைக்காக ஒரு ரோல் நடிக்க போக அவரின் மொத்த காரியமும் நடிப்பிற்காக மாறிவிட்டது.