Vettiyan: இயக்குனர் தா.ச.ஞானவேல் அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளர். அதன்பின் திரைப்படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு இயக்குனராக மாறினார். இவர் இயக்கி முதல் திரைப்படம் எனக்குள் ஒருவன். ஆனால், இந்த படம் வெற்றியை பெறவில்லை. அதன்பின் சில வருடங்கள் கழித்து அவர் சொல்லி அடித்த படம்தான் ஜெய்பீம்.
நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்துபோது அவர் எடுத்து நடத்தி வெற்றி பெற்ற ஒரு வழக்கை மையக்கதையாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தார் ஞானவேல். இருளர் இனத்தை சேர்ந்த அந்த பாதிக்கப்பட்ட நபர்கள் மீது போலீசார் எப்படி பொய் வழக்கு போட்டு சித்திரவதை செய்தனர் என காட்டியிருந்தார் ஞானவேல்.
இந்த படம் ரஜினிக்கு பிடித்துப்போக ஞானவேலை அழைத்து கதை கேட்டார். அப்படி உருவான திரைப்படம்தான் வேட்டையன். பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோ போலீஸ் எனில் கண்டிப்பாக அவர் ரவுடிகளை என்கவுண்ட்டர் செய்து போல போல காட்டி ஹீரோயிசம் காட்டுவார்கள்.
விக்ரம், விஜய், சூர்யா, கமல், ரஜினி என பலரும் அப்படி நடித்திருக்கிறார்கள். ஆனால், என்கவுண்ட்ரின் மறுபக்கத்தை இந்த படத்தில் அலசி இருக்கிறார் ஞானவேல். ரஜினிக்கே இது வித்தியாசமான படம்தான். ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட சம்பந்தப்பட்ட கொலையாளியை என்கவுண்ட்டர் செய்கிறார் ரஜினி.
ஆனால், அதன்பின்னரே அவருக்கு ஒரு முக்கிய உண்மை தெரிய வருகிறது. அதன்பின் ரஜினி என்ன செய்தார் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பல கேள்விகளையும் முன் வைத்திருக்கிறது. முக்கியமாக பாலியல் வன்முறை காட்சிகள் அடிக்கடி வருவதாக பலராலும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இதுபற்றி பேசியுள்ள ஞானவேல் ‘வேட்டையன் படத்தில் பாலியல் வன்முறை பற்றிய காட்சிகள் திரும்ப திரும்ப வருவதாக வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் என்னை நான் சரி செய்து கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள இதுபோன்ற ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் எனக்கு உதவுகிறது’ என சொல்லி இருக்கிறார்.
அந்த வாயை…
Sivakarthikeyan: அமரன்…
Kanguva: கங்குவா…
தான் நடித்த…
Kanguva: கங்குவா…