பொதுவாகவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் பொருத்தவரை கதையை மட்டும் தான் கேட்பார். அதில் பிடிச்சிருந்தால் நடிப்பார். மற்றபடி ஓகேன்னதும் இயக்குனருடன் விவாதம் செய்ய மாட்டார். அவர் பொறுப்பில் விட்டுவிடுவார் என்பார்கள்.
கமல் தான் இயக்குனருக்கு அவ்வப்போது ஐடியா கொடுப்பார். அவரைத் தன்வசப்படுத்த முயற்சிப்பார் என்பார்கள். ஆனால், இங்கு அது மாறியுள்ளது. என்னன்னு பார்க்கலாமா…
2014ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் லிங்கா. அவருடன் இணைந்து சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம், ராதாரவி, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் தான் மியூசிக் டைரக்டர்.
படம் ரிலீஸ் அன்று ரஜினிக்குப் பிறந்த நாள். 12.12.2014 அன்று தான் ரிலீஸ். எதிர்பார்த்த அளவு படம் ஓடவில்லை.
இதற்குக் காரணம் கதை ரொம்ப ஸ்லோவாகப் போகுதுன்னாங்க. படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் டப்பிங் ஆனது. படத்தில் ஓ நண்பா, என் மன்னவா, இந்தியனே வா, மோனா கலோலினா, உண்மை ஒருநாள் வெல்லும் ஆகிய பாடல்கள் உள்ளன.
படத்தின் கதையை பொன்குமார் என்பவர் எழுதி இருந்தார். திரைக்கதை, இயக்கத்தை கே.எஸ்.ரவிகுமார் கவனித்துக் கொண்டார். படத்தில் ரஜினிகாந்த் தான் லிங்கா.
அதாவது கோட்டையூர் ராசா லிங்கேஸ்வரனாகவும் அவரது பேரன் கே.லிங்கேஸ்வரனாகவும் நடித்துள்ளார். இரு வேடங்கள் தான். ஒன்று பிளாஷ்பேக்கில் வரும். அதுவே ரொம்ப ஜவ்வாக இழு இழுன்னு இழுத்துவிட்டது. படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.
லிங்கா படம் குறித்து அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
லிங்கா படத்தின் கிளைமாக்ஸே வேற. அந்தப் படத்துல பலூன் சீன் கிடையாது. நான் யோசிச்சு வச்ச கதையை ரஜினிகாந்த் மாத்திட்டாரு. எங்க யாருக்குமே அது புடிக்கல. அவர் தலையிட்டதால வேற வழி இல்லாம மாத்த வேண்டியதா போச்சு என்று அவர் தெரிவித்துள்ளார்.
படத்தின் இன்னொரு மைனஸ் என்னன்னா ரஜினியின் வயது முதிர்வு நன்றாகத் தெரிந்து விட்டது. மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றார்கள்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…