பிரபல நடிகருடன் சேர்ந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜ்! 10 படம்தான்னு சொன்னது ஏன்னு இப்ப புரியுதா?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே ஒரு தரமான இயக்குனராக மாறினார். தொடர்ந்து கைதி, விக்ரம், மாஸ்டர் ,லியோ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.

அதுமட்டுமில்லாமல் கோடிகளில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலிலும் லோகேஷிற்கு என தனி இடம் இருக்கிறது. தற்போது ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

இதற்கிடையில் லோகேஷ் முன்னதாகவே ஒரு பத்து படம் இயக்கிவிட்டு சினிமாவில் இருந்து விலகி விடலாம் என்ற முடிவில் இருப்பதாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இவருடைய இந்த பேட்டி வெளியானதில் இருந்து பெரும் சர்ச்சையாக மாறியது. தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இந்த மாதிரி பேசுவது சரியா என்ற வகையில் விவாதமே நடந்தது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் குறித்து இப்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம் புறநானூறு. இந்தப் படத்தில் லோகேஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

புற நானூறு திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் சூர்யா நடிக்க இருந்த திரைப்படம். ஆனால் அந்தப் படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி அமையும் படமாக உருவாக இருந்ததால் சூர்யா அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அதன் பிறகு தனுஷா அல்லது சிவகார்த்திகேயனா என்ற கேள்வி எழுந்து வந்தது. கடைசியாக புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்த படியாக சிபி சக்கரவர்த்தியுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகுதான் சுதா கொங்கராவுடன் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story