டிராகனில் இது அல்டிமேட்டா இருக்கும்!.. செம ஹைப் ஏத்துறாங்களே!...

by சிவா |
டிராகனில் இது அல்டிமேட்டா இருக்கும்!.. செம ஹைப் ஏத்துறாங்களே!...
X

Dragon: ஐடி துறையில் பணியாற்றி வந்த பிரதீப்புக்கு சினிமாவில் அதிக ஆர்வம் இருக்க குறும்படங்களை இயக்க துவங்கினார். அதன்பின் ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அடுத்து லவ் டுடே என்கிற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமும் ஹிட் அடிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் ஆகிய படங்களில் நடித்தார். இதில், டிராகன் படம் முடிந்து வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியானது. அதில் பல காட்சிகள் சிவகார்த்திகேயனின் டான் படத்தை நினைவு படுத்தியது. ஆனால், இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இயக்குனர் விளக்கம் கொடுத்திருந்தார். இந்த படத்தில் ஒரு பிரேக்கப் பாடலை நடிகர் சிம்பு பாடிக்கொடுத்திருக்கிறார்.

அதற்கு காரணம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் வருகிற 22ம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டுமே காதல் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு பொறுப்பில்லாத கல்லூரி மாணவன் தன் வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதை டிராகன் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

டான் படத்தில் எஸ்.ஜே.சூர்யா போல டிராகன் படத்தில் இயக்குனர் மிஷ்கின் கல்லூரி புரபஷராக நடித்திருக்கிறார். இவரின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். மிஷ்கினும் பல காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறாரம். இந்த படம் வெளியானால் மிஷ்கினின் நடிப்பை பலரும் பராட்டுவார்கள் என சொல்லப்படுகிறது.

அதேபோல், இயக்குனர் கவுதம் மேனனின் வேடமும் சிறப்பாக அமைந்திருக்கிறதாம். எனவே, அவரும் பக்காவாக ஸ்கோர் செய்திருப்பதோடு ஒரு பாடலில் பிரதீப்புடன் இணைந்து அவர் அசத்தலாக நடனமும் ஆடியிருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் 2k கிட்ஸ்களிடம் வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story