‘மகாராஜா’ படத்தில் விஜய் மிகவும் பாராட்டிய கேரக்டர் யார் தெரியுமா? இயக்குனரே சொன்ன தகவல்

by ராம் சுதன் |

விஜய்சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படத்தை குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்தாண்டு வெளியான படங்களிலேயே மகாராஜா திரைப்படத்திற்குத்தான் அதிகளவு வரவேற்பு கிடைத்தது. 100 கோடி கிளப்பிலும் இணைந்தது. இதன் மூலம் விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் 100 கோடி கிளப்பில் இணைந்த முதல் படமாக அமைந்தது.

படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கியிருப்பார் படத்தின் இயக்குனர் நித்திலன். குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 7 வருட காத்திருப்புக்கு பின் வெளியானது இந்த மகாராஜா திரைப்படம். அதுவும் விஜய் சேதுபதிக்கு 50வது படமாக அமைந்தது அதை விட சிறப்பு.

எந்த கேரக்டரையும் நம்மால் ஈஸியாக கடந்து விட முடியாது. விஜய் சேதுபதியில் இருந்து லட்சுமியாக வரும் குப்பை தொட்டி வரை ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யத்தை வைத்திருந்தார் நித்திலன்.

இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் விஜய் நித்திலன் சாமிநாதனை அழைத்து பாராட்டிய புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலானது. அதில் விஜய் படத்தை பற்றி என்னெல்லாம் பேசினார் என்பதை பற்றி நித்திலன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,

படத்தை பற்றி மிகவும் பாராட்டியதாகவும் அதில் சிங்கம் புலி கேரக்டரை பற்றி மிகவும் பாராட்டினார் விஜய் என்றும் நித்திலன் கூறினார். மேலும் விஜய் சேதுபதியின் நடிப்பைப் பற்றியும் பேசியதாக கூறினார். அதோடு படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒவ்வொரு சீனையும் விடாமல் ரசித்து ரசித்து பாராட்டினார் என்றும் நித்திலன் கூறினார்.

அவர் பாராட்டும் போது விஜயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாராம் இயக்குனர். அதற்கு விஜய் ‘என்ன பாஸ்? ’ என சிரிக்க அதற்கு நித்திலன் ‘ நீங்க பாராட்டுங்க சார்.. உங்களையே பார்த்துட்டு இருக்கேன்’என கூறினாராம். அதற்கும் விஜய் ‘கூலா இருங்க பாஸ்’ என கூறினாராம்.

Next Story