முதல்ல உங்க மதத்துல வீரத்தை காட்டுங்க!.. அப்புறம் பேசுங்க.. அமீருக்கு பேரரசு கண்டனம்!..

இசைஞானி இளையராஜா:
உலகமெங்கும் இருக்கும் ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. தனது பாடல்கள் மூலமாக 90'ஸ் கிட்ஸ் பலரையும் கட்டி போட்டவர் இளையராஜா. இவர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில் அங்கு கருவறைக்குள் செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
உள்ளே அனுமதிக்காமல் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்து கோவில் சார்பாக செய்யப்பட்ட மரியாதையை ஏற்றுக் கொண்டார். இது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. ஆளாளுக்கு தங்களது கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் தரப்பிலிருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.
இளையராஜா விளக்கம்:
சமூக வலைதள பக்கங்களில் தேவையில்லாமல் கருத்துக்கள் வெளியாவதை பார்த்த இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் 'என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல. விட்டுக் கொடுக்கவும் இல்லை.
நடக்காத செய்தியை நடந்ததாக பதிவு செய்து வருகிறார்கள். இந்த பதிவுகளை எல்லாம் வதந்திகளை எல்லாம் ரசிகர்களும் மக்களும் நம்ப வேண்டாம்' என்று கூறியிருந்தார். இசைஞானி இளையராஜா நேற்று தனது சார்பாக பதிவை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அமீர் கொந்தளிப்பு:
எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதற்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்து வரும் அமீர் நேற்று இளையராஜாவை கோவில் கருவறைக்குள் அனுமதிக்காதது குறித்தும் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்தாலும் தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும் உலக அரங்கில் இசைஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை.
சனாதனம் தலைவிரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும் என்று ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். இந்த பதிவானது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது. இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வந்தார்கள்.
பேரரசு கண்டனம்:
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. இவர் நடிகரும், இயக்குனருமான அமீரின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.. இயக்குனர் அமீர் அவர்கள் நடக்காத ஒரு நிகழ்வுக்கு பதிவு போடுவது தேவை இல்லாத ஒன்று. அமீர் இஸ்லாத்தில் பற்று உள்ளவர் என்பது ஊரறிந்த விஷயம்.
இஸ்லாத்தில் எத்தனையோ குறை இருக்கும். அதை சுட்டிக்காட்டி உங்கள் வீரத்தை காட்டுங்கள். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பள்ளிவாசலில் சமத்துவத்திற்கு போராடுங்கள். பின், சனாதானத்தைப் பற்றி பேசலாம்' என்று கூறியிருக்கின்றார். இந்த பதிவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.