கோட்டை விட்ட வேட்டையன்னு சொல்லிட்டாரே... யாருப்பா அந்த டைரக்டரு?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:13  )

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்திற்குப் பிறகு களம் இறங்கியுள்ள படம் வேட்டையன். இந்த முறை ரஜினியுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேலும் ரஜினியை வைத்து முதன் முதலாக இயக்கியுள்ளார். அனிருத் பக்காவாக மியூசிக் போட்டு ரசிகர்களை அசத்தியுள்ளார்.

அவரது இசையில் 'மனசிலாயோ' பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது. என்ன தான் பாட்டு மாஸாக இருந்தாலும் காவாலா அளவுக்கு இது வரவில்லை. அதோட ரேஞ்சே வேற. 250 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இன்றுவரை வெற்றி நடைபோட்டு வருகிறது.

வேட்டையன் படத்தின் கதை அழுத்தமானது தான் என்றாலும் திரைக்கதையில் சொதப்பி விட்டது என்கிறார் பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி. இவர் ரட்சகன் என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமானார். இவர் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

ரட்சகன், ஜோடி, ஸ்டார், துள்ளல், புலிப்பார்வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது ரஜினி நடித்த வேட்டையன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தின் வசூல் பெரிய அளவில் இன்னும் எதிர்பார்த்தபடி வரவில்லை. இருந்தாலும் படத்தின் பட்ஜெட்டைப் பொருத்தவரை அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது என்றே சொல்லலாம்.

படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் ஆகா, ஓகோ என்று பாராட்டியும் வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் இயக்குனர் பிரவீன்காந்தி மட்டும் பொசுக்குன்னு இப்படி சொல்லிவிட்டாரே என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா...

ரஜினி, அமிதாப், பகத் பாசில், ராணா, அனிருத் இருந்தும் வேட்டையன் கோட்டை விட்ட இடம் திரைக்கதை. கோட்டை கூட சொல்லலாம். குட்டை கூட சொல்லலாம். ரஜினி பண்றது ஒரு தடவை தான் லாஜிக் இருக்கு. மத்த வாட்டி எல்லாம் முட்டாள்தனமா இருக்கு. நல்ல வேலை அவங்களோட யோகம் 3 நாள் லீவு. அதனால படம் ஓடும். திங்கள் கிழமையில இருந்து படம் ஓடாது என்கிறார் பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி.

Next Story