மெய்யழகன் படத்துல ஸ்ரீதிவ்யா வந்தது இப்படி தானா? டைரக்டரோட 'டச்' செமயா இருக்கே!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:32  )

சமீபத்தில் வெளியான படங்களில் மெய்யழகன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்தி, அரவிந்தசாமி நடிப்பில் வெளியான இந்தப் படத்தை பிரேம்குமார் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே 96 என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர்.

மெய்யழகன் படத்தில் ஒரு அழகியலைச் சொல்லி இருப்பார். படத்தில் பெரிய அளவில் பாட்டு கிடையாது. பைட் கிடையாது. காமெடி கிடையாது. ஆனா படத்தை சூப்பரா எடுத்து இருப்பார் இயக்குனர் பிரேம்குமார். பழைய நினைவலைகளை 96 படத்தில் தான் மீட்டு எடுத்து இருப்பார். அதே போல தஞ்சாவூர் அருகில் உள்ள நீட்டாமங்கலத்தின் சிறப்புகளைப் பற்றி அழகாக படத்தில் சொல்லி இருப்பார்.

அந்த மண்ணின் கதை தான் மெய்யழகன். இரு மாறுபட்ட துருவங்கள் சந்தித்தால் அது எப்படி இருக்கும் என்பதை இரு கேரக்டர்களை வைத்து சுவராசியமாக செதுக்கி இருப்பார். அதிலும் கார்த்தி செம மாஸாக நடித்து இருப்பார். அரவிந்தசாமியும் அவருக்கே உரிய ஸ்டைலில் மாஸ் நடிப்பைக் காட்டியிருப்பார்.

இந்தப் படத்தில் யதார்த்தமான திரைக்கதை, இரு கதாபாத்திரங்கள் சுவாரசியமாக பேசுவது என படத்தை வெகு அழகாக நகர்த்தி இருந்தார். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருந்தார். அந்தக் கேரக்டருக்கு அவரை விட்டா வேற ஆளே இல்லைன்னு சொல்லலாம். அவ்ளோ அழகா அந்தக் கேரக்டரை ரசித்து நடித்து இருந்தார் ஸ்ரீதிவ்யா.

இந்தப் படத்தில் அவர் நடிக்க வந்தது எப்படி என்பதை இயக்குனர் பிரேம்குமார் சொல்கிறார். வாங்க பார்க்கலாம். நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. எங்க அம்மவுக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும். மெய்யழகன் படத்திற்கு எங்க அம்மா கூட ஸ்ரீதிவ்யாவை கிராமத்து கதாபாத்திரத்துக்கு நடிக்க வச்சா கரெக்டா இருக்கும். அந்தப் பொண்ணையே போடுன்னு சொன்னாங்க.

அவங்க மேடையில் பேசும்போதெல்லாம் கேட்டீங்கன்னா குழந்தை மாதிரியே பேசுவாங்க. ஸ்ரீதிவ்யா ரொம்ப வெள்ளந்தியான பொண்ணு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தான் ஸ்ரீதிவ்யான்னா யாருன்னே ரசிகர்களுக்குத் தெரிந்தது. ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் நடித்த முதல் படம் இதுதான். ஆனா அறிமுகமான நடிகை மாதிரியே இல்லாமல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முதல் படமே சிவகார்த்திகேயன் ஜோடி. சூப்பர்ஹிட் ஆக, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தார்.

தொடர்ந்து அவர் நடித்த பென்சில், காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை படங்களில் காக்கி சட்டை கொஞ்சம் கைகொடுத்தது. இதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி தான்.

Next Story