தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்கு போராடி கொண்டிருப்பவர் சியான் விக்ரம். தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து சுமார் 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. விக்ரம் இன்னும் முன்னணி நடிகராக வர முடியாமல் தடுமாறி வருகிறார். தற்போது இவரின் படங்கள் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களின் படங்களை விட குறைந்த மதிப்பைதான் பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் விக்ரம் ஏன் இன்னும் முன்னிலைக்கு வராமல் இருக்கிறார்? என்ற தகவலை பகிர்ந்துள்ளார். விக்ரமும், இயக்குனர் ராஜகுமாரனும் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். அந்த படம் எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை. இதனால் ஒரு முறை ராஜகுமாரன் விக்ரமின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார்.
அப்பொழுது விக்ரமின் மனைவி தொலைபேசியை எடுத்து இந்த படம் சரியா போகவில்லை என்றால் விக்ரமுக்கு அடுத்த படம் கிடைக்கும் உங்க நிலைமை தான் பாவம் என்று கிண்டல் செய்துள்ளார். இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார் ராஜகுமாரன். இந்த மன வருத்தம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர்,” விக்ரமை பட்டித் தொட்டியம் கொண்டு போய் சேர்த்தது நான்தான். என்னுடைய ரசிகர்கள் தான். அவரை எங்கும் கொண்டாடினார்கள். அது விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் மூலம் நிகழ்ந்தது. ஆனால் அதன் பிறகு விக்ரம் எனக்கு எந்த பட வாய்ப்பும் கொடுக்கவில்லை. அவர் இப்படி இருந்தால் எப்படி முன்னேறுவார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரே இயக்குனருடன் 60 படங்கள் நடித்துள்ளார் அதனால் தான் அவர் இன்றும் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார்”. என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
