தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டார். ஒரு துறையில் மேலே வந்த எந்த ஒரு நபருக்கு பின்னாடியும் ஏதோ ஒரு ஆண் அல்லது பெண் துணையாக நிற்பார். அப்படி விஜயகாந்துக்கு நிழலாய் நின்று அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றவர் இப்ராஹிம் ராவுத்தர். தமிழ் சினிமாவில் இவர்களைப் போல ஒரு நண்பர்களை யாரும் பார்க்க முடியாது.
ஆனால் அப்படிப்பட்ட நண்பர்களே ஒரு காலகட்டத்தில் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.செல்வமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த்-ராவுத்தர் பிரிவு, விஜயகாந்தை எவ்வாறு வேதனை அடைய செய்தது என்று கூறியுள்ளார்,
அவருடைய தயாரிப்பு நிறுவனம் பெயர் கூட ராவுத்தர் ஃபிலிம்ஸ் என்றுதான் இருக்கும். விஜயகாந்த் ஷூட்டிங் இருக்கு மட்டும் தான் வருவார் அங்கு வந்து இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்துவிட்டு செல்வார் எந்த இடையூறும் செய்ய மாட்டார். எந்த கேள்வியும் கேட்க மாட்டார். ஏனென்றால் நாம் முதலில் விஜயகாந்த் உடன் படம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் முதலில் சந்திக்க வேண்டிய நபர் அவரின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் அவரிடம் படத்தின் முழு கதையும் சொல்ல வேண்டும் அங்கே சில கேள்விகள் கேட்பார் ராவுத்தரை நாம் கன்வின்ஸ் செய்து விட்டோம் என்றால் போதும்.
”விஜயகாந்த் அவர் மனைவியை விட உற்றார் உறவினர்களை விட அதிகம் நேசித்த நபர் இப்ராஹிம் ராவுத்தர். கேப்டன் பிரபாகரன் படத்தின் கதையை விஜயகாந்த் சாரிடம் சொல்லும் பொழுது என்ன செல்வமணி இது சப்புன்னு இருக்கு என்று சொன்னார். அருகில் இருந்த இப்ராஹிம் ராவுத்தர் டேய் போடா இது கரெக்டா இருக்கும் அப்படின்னு ஒரே வார்த்தையில் ஓகே பண்ணிட்டாரு”.
”தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இருவருக்கும் இடையில் எதிர்பாராத விதமாக பிரிவு ஏற்பட்டது. ஆனாலும் இதற்கு முழுக்க முழுக்க ராவுத்தர் ஐயா தான் காரணம். விஜயகாந்த் சார் மீது 100 சதவீதம் உண்மை இருக்கிறது. ராவுத்தர் உடல்நிலை சரியில்லாமல் கோமா ஸ்டேஜ் போயிட்டாரு. விஷயம் தெரிஞ்சு விஜயகாந்த் மருத்துவமனைக்கு வந்தார்”.
”அந்த நிலையில் இப்ராஹிமை பார்த்த உடன் ஆடி போயிட்டார். இனிமேல் பழைய நிலைமைக்கு வர கஷ்டம் என்று டாக்டர்கள் சொன்னதால் உறைந்து போனார். ராவுத்தரிடம் சென்று டேய் இப்ராஹிம் டேய் இப்ராஹிம் என்று அவரை எழுப்பினார். அவரின் உடல் அசையவில்லை. உடலில் கொஞ்சம் கூட சக்தி இல்லாமல் இருந்தார்.
விஜயகாந்த் குரலைக் கேட்டதும் ராவுத்தரின் கண்களில் தண்ணீர் வழிந்தது. அதுதான் இருவருக்கும் இருந்த ஆழமான நட்பு. உணர்வற்ற நிலையில் கூட விஜயகாந்தின் குரலுக்கு ராவுத்தரின் உடல் அசைவு கொடுத்தது நட்பின் உச்சகட்ட ஆழம் என்றே சொல்லலாம்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
