இந்த 2 படம் இல்லன்னா விஜய் கட்சி ஆரம்பிச்சிருக்க முடியுமா?.. புது புரளியை கிளப்பிய இயக்குனர்..

Actor Vijay: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தொடர்ந்து சினிமாவிலும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த நடிகர் விஜய் திடீரென்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார்.
தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தனது கட்சியின் கொடி, பாடல், மாநாடு என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து முடித்து இருக்கின்றார். தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றார் நடிகர் விஜய்.
அதிலும் நடிகர் விஜய் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டில் இருந்து கொண்டே அரசியல் செய்து வருகின்றார். வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி, பனையூர் பண்ணையார் என்ற பல்வேறு கேலி கிண்டல்களுக்கு ஆளாகி வருகின்றார். இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் பரந்தூர் சென்று அங்கு போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நின்று பேசியிருந்தார்.
இப்படி ஒரு பக்கம் சினிமா, மற்றொரு பக்கம் அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் தற்போது தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை ஹச் வினோத் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து இயக்குனர் ஆர்பி உதயகுமார் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனரான ஆர் பி உதயகுமார் நேற்று மனிதம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியிருந்ததாவது 'திருப்பாச்சி மற்றும் சிவகாசி திரைப்படங்கள் இல்லை என்றால் நடிகர் விஜய் இவ்வளவு ஃபேமஸ் ஆகி இருப்பாரா?
இல்லையென்றால் விஜய் இன்றைக்கு கட்சி ஆரம்பித்திருக்க முடியுமா? எல்லாத்துக்கும் காரணம் அந்த இரண்டு திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த பாடல்கள் தான் விஜய்யை இந்த அளவுக்கு பேமஸ் ஆகி இருக்கின்றது. விஜயை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கின்றது. விஜய்க்கு இன்றைக்கு வரை பேசப்படும் படங்களாக இந்த இரண்டு திரைப்படங்களும் இருக்கின்றது. அதை அவர் மறந்து விடக்கூடாது' என்று கூறி இருக்கின்றார்.
இந்த பேட்டியானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது இதை பார்த்த விஜய் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த போது நடிகர் விஜய்யை கை கொடுத்து தூக்கி விட்ட திரைப்படங்கள் சிவகாசி மற்றும் திருப்பாச்சி. இந்த இரண்டு திரைப்படங்களும் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.