Categories: latest news

இந்த 2 படம் இல்லன்னா விஜய் கட்சி ஆரம்பிச்சிருக்க முடியுமா?.. புது புரளியை கிளப்பிய இயக்குனர்..

Actor Vijay: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தொடர்ந்து சினிமாவிலும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த நடிகர் விஜய் திடீரென்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார்.

தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தனது கட்சியின் கொடி, பாடல், மாநாடு என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து முடித்து இருக்கின்றார். தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றார் நடிகர் விஜய்.

அதிலும் நடிகர் விஜய் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டில் இருந்து கொண்டே அரசியல் செய்து வருகின்றார். வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி, பனையூர் பண்ணையார் என்ற பல்வேறு கேலி கிண்டல்களுக்கு ஆளாகி வருகின்றார். இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் பரந்தூர் சென்று அங்கு போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நின்று பேசியிருந்தார்.

இப்படி ஒரு பக்கம் சினிமா, மற்றொரு பக்கம் அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் தற்போது தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை ஹச் வினோத் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து இயக்குனர் ஆர்பி உதயகுமார் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனரான ஆர் பி உதயகுமார் நேற்று மனிதம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியிருந்ததாவது ‘திருப்பாச்சி மற்றும் சிவகாசி திரைப்படங்கள் இல்லை என்றால் நடிகர் விஜய் இவ்வளவு ஃபேமஸ் ஆகி இருப்பாரா?

இல்லையென்றால் விஜய் இன்றைக்கு கட்சி ஆரம்பித்திருக்க முடியுமா? எல்லாத்துக்கும் காரணம் அந்த இரண்டு திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த பாடல்கள் தான் விஜய்யை இந்த அளவுக்கு பேமஸ் ஆகி இருக்கின்றது. விஜயை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கின்றது. விஜய்க்கு இன்றைக்கு வரை பேசப்படும் படங்களாக இந்த இரண்டு திரைப்படங்களும் இருக்கின்றது. அதை அவர் மறந்து விடக்கூடாது’ என்று கூறி இருக்கின்றார்.

இந்த பேட்டியானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது இதை பார்த்த விஜய் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த போது நடிகர் விஜய்யை கை கொடுத்து தூக்கி விட்ட திரைப்படங்கள் சிவகாசி மற்றும் திருப்பாச்சி. இந்த இரண்டு திரைப்படங்களும் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya suresh

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago