ரஜினி லிஸ்ட் நிக்காம போகுதே!.. பாட்ஷா பட இயக்குனரும் கதை சொல்லிருக்காராமே..!

நடிகர் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். 74 வயதான போதிலும் தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகின்றார். அதிலும் இவர் கைகோர்க்கும் இயக்குனர்கள் அனைவருமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர்கள் தான்.
இவர் கடைசியாக எல் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
கூலி திரைப்படம்: கூலி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவர் தான் இயக்கிய எந்த திரைப்படங்களிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது. கமல்ஹாசன் அவர்களை வைத்து விக்ரம் என்கின்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்திருந்த நிலையில் ரஜினிக்கும் கூலி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்த திரைப்படத்தில் அனைத்து திரையுலவை சேர்ந்த நடகர்களும் நடித்து வருகிறார்கள். நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், சத்யராஜ், அமீர்கான் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இடையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2 திரைப்படம்: நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் கொடுத்த நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாகத்தை இயக்குவதற்கு நெல்சன் தயாராக இருக்கின்றார்.
கூலி திரைப்படத்தை முடித்த கையோடு ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி செட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இயக்குனர்கள் லிஸ்ட்: ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் எந்த இயக்குனரின் படத்தில் நடிக்கப் போகின்றார் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தொடர்ந்து பல இயக்குனர்கள் நடிகர் ரஜினிகாந்த் கதை கூறி இருக்கிறார்கள். இந்த லிஸ்டில் பல இயக்குனர்களின் பெயர் இருக்கின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அல்லது மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து பல ஹிட்டு திரைப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு கதை கூறியிருக்கின்றாம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறியிருந்ததாவது 'ரஜினி சார் என்னை அழைத்து கதை கேட்டார். நானும் என்னிடம் இருக்கும் கதைகளை சொன்னேன். நான் மட்டுமல்ல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூம் ரஜினி சாருக்கு ஒரு கதை கூறி இருக்கின்றார். அவர் சொன்ன கதையும் ரஜினிகாந்துக்கு பிடித்திருந்தது. ஆனாலும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கும் நிலையில் எதிர்காலத்தில் ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கின்றது' என அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.