வடிவேலுவை அப்படி திட்டிய கவுண்டமணி... அதுக்கு வைகைப்புயல் கொடுத்த லந்தைப் பாருங்க!

குடும்பப் படங்களை மட்டும் இயக்கி தாய்மார்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றவர் இயக்குனர் வி.சேகர். இவர் இயக்கிய பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், நான் பெத்த மகனே, காலம் மாறிப்போச்சு, வரவு எட்டணா செலவு பத்தணா படங்கள் சூப்பர்ஹிட். இவர் கவுண்டமணி, வடிவேலுவுக்கு இடையே ரியலா நடந்த சில காமெடி சம்பவங்களைப் பற்றி இப்படி சொல்கிறார்.
இடிக்கிற மாதிரி நிறுத்துறான்: வடிவேலு 2வது படத்திலேயே கார் வாங்கிட்டான். சிக்கலே கார் வாங்கினதுதான். அதுக்கு அடுத்த படத்துல கவுண்டமணி, செந்திலும் இருக்காங்க. அப்போ இவன் என்ன பண்ணிட்டான்னா இவன் புதுசா கார் வாங்கிட்டான்ல. அவங்க ரெண்டு பேரு காரும் நிக்குதுல்ல. அதுக்கு நடுவுல கொண்டு வந்து 'சர்...ரு'ன்னு இடிக்கிற மாதிரி நிறுத்துறான். புதுசா கார் வாங்கிருக்காராம்.
வண்டி எப்படி நிக்குது?: உடனே செந்தில் போய், 'சார் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா நம்ம வண்டியிலேயே இடிச்சிடுவான் போல. அவன் வண்டி எப்படி நிக்குது பாருங்க'ன்னு கவுண்டமணிக்கிட்ட சொல்றார். இவர் சீனியரு இல்ல. கவுண்டமணி சொல்றாரு. 'விட்டா நம்மை மேலயே ஏத்திருவான் போல'ன்னு. எங்கிட்ட கூப்பிட்டு பேசுறான்.
'இவன் ஒரு சாதாரண ஆளு'ன்னு. நான் பெத்த மகனே படத்தை எடுக்கும்போது தான் இது நடந்தது. இந்த மூணு பேரும்தான் நடிச்சிருந்தாங்க. அதுக்கு வடிவேலு, 'சார் இடிச்சேனான்னு இடிக்கிற மாதிரிதானே வந்து நிக்கிறேன்'னு சொல்றான். அவன் புது வண்டி வாங்கிட்டானாம். அதுவும் காஸ்ட்லியான வண்டியாம்.
இடிச்சாலும் இடிச்சிருவான்: அவரு சொல்றாரு. 'நம்ம வீட்ல அஞ்சாறு வண்டி நிக்குதுடா. புது வண்டியை வாங்கிட்டேன்னு நிறுத்துறான். இடிச்சாலும் இடிச்சிருவான். பார்த்துக்க'ன்னு சொல்றாரு. 'வண்டியை இப்படி நிறுத்தாதய்யா'ன்னு சொன்னேன். 'சார் வண்டி இடம் இருந்தா நிறுத்தப் போறேன். இதுல என்ன சார் இருக்கு? அப்புறம் வேற எங்கே சார் நிறுத்த முடியும்'னு சொல்றான்.
காலம் மாறிப்போச்சு: அப்புறம் அவங்க எதிர்க்கவே என்னை ஏறச் சொல்லி வண்டியில 2 சுத்து சுத்தி வாரான். வேணும்னே அவங்களைக் கடுப்பேத்துறான். அப்படி சுத்தி அப்படி ஒரு ரவுண்டு வந்து ஸ்டைலா இறங்குறான். அவங்களுக்கு இவனப் பார்த்த உடனே கடுப்பாகுது. இவனை வந்து தூக்கிடணும்னு முடிவு பண்ணிட்டாங்க. செந்தில் பேச்சைக் கேட்டு 'வடிவேலு வேணாம் சார்'னு சொன்னாரு.
காலம் மாறிப்போச்சு படத்துக்கு. நானும் வடிவேலுவைப் போட்டா தான் சரியா இருக்கும். எனக்கு அவனைத் தூக்க மனசு வரல. அதுக்கு அட்வான்ஸ்லாம் கொடுத்தாச்சுன்னு சொன்னதும் அவன் நடிச்சா நாங்க நடிக்கலன்னு சொன்னாங்க. அவங்க போயிட்டாங்க. அப்படித்தான் அந்தப் படத்துல வடிவேலு வந்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.