‘கோட்’ பட டிரெய்லர் எப்போது? புது அப்டேட்டை கொடுத்த வெங்கட் பிரபு.. இது போதும்ணே
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கோட். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி, சினேகா போன்றோர் நடிக்கின்றனர். கூடவே பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடுவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் த்ரிஷா இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியிருப்பதாக கூறப்படுகிறது.
அந்தப் பாடல்தான் நாளை ரிலீஸ் ஆக இருக்கின்றது. ஏற்கனவே இரண்டு சிங்கிள்கள் வெளியான நிலையில் நாளை மூன்றாவது சிங்கிள் வெளியாக இருக்கின்றது. படத்திற்கு இசை யுவன்சங்கர் ராஜா. வெளியான இரண்டு சிங்கிள்களும் ரசிகர்களை கவரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
விஜய்க்கு உண்டான அந்த பீட்டே யுவன்சங்கர் ராஜாவிடம் வெளிப்படவில்லை. நாளை வெளியாகும் மூன்றாவது சிங்கிள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்த பார்ப்போம். இந்த நிலையில் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகின்றது.
அவரிடம் கோட் படத்தின் டிரெய்லர் பற்றி கேட்ட போது படத்தின் ரிலீஸ் தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அல்லது 10 நாள்கள் முன்புதான் டிரெய்லரை வெளியிடுவோம் என கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு. முன்னதாக வெளியிட்டால் அது நன்றாக இருக்காது. இப்ப உள்ள படங்கள் எல்லாமே இப்படித்தான் டிரெய்லரை வெளியிடுகிறார்கள்.
அதனால் ரிலீஸுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கோட் பட டிரெய்லர் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்.படத்தை பொறுத்தவரைக்கும் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.
விஎஃப் எக்ஸ் வேலைகளும் அதிகமாக படத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் யங் விஜய் தோற்றத்தில் விஜய் நடிப்பதால் அதற்கு அமெரிக்கா வரை சென்று அதற்கான வேலைகளிலும் விஜய் ஈடுபட்டார். வாரிசு பட விமர்சனத்திற்கு பிறகு இந்த படம் கண்டிப்பாக வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. வெங்கட் பிரபு என்ன செய்திருக்கிறார் என்பதை செப்டம்பர் வரை காத்திருப்போம்.