மனைவியை டெலிவரிக்கு அனுப்பிட்டு நடிகையுடன் திருமணமா? இயக்குனர் செஞ்ச வேலையில் ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகையுடன் திருமணமா? இயக்குனர் செய்த வேலையால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கும் செய்திதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அந்த இயக்குனர் யார் என தெரிந்தால் இவரா ? என கேட்பீர்கள். ஆம் . அவர் வேறு யாருமில்லை. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்தான். இயக்குனராக, சின்னத்திரை நடிகராக, தொகுப்பாளாராக ஒளிப்பதிவாளராக என பன்முகத் திறமைகள் கொண்ட ஒரு கலைஞன் தான் விக்னேஷ் கார்த்திக்.
ஜிவி நடிப்பில் கடந்தாண்டு வெளியான அடியே படத்தை இயக்கியவரும் விக்னேஷ் கார்த்திக்தான். ஏகப்பட்ட குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார். ரேடியோ ஜாக்கியாகவும் பணிபுரிந்தவர். விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜீ தமிழ் என முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். ஆங்கர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தவர்,
முதன் முதலில் நட்பதிகாரம் என்ற படத்தில்தான் நடிகராக அறிமுகமானார் விக்னேஷ் கார்த்திக். அதை போல பகல் நிலவு சீரியல்தான் அவர் முதன் முதலில் நடித்த சீரியல். மேலும் இயக்குனராக ஏண்டா தலையில எண்ணெ வைக்கல என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் படம் அந்தளவுக்கு ரீச் ஆகவில்லை. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் அஸார் ஹீரோவாக நடித்திருப்பார்.
கலக்கப் போவது யாரு? கிங்ஸ் ஆஃப் காமெடி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மக்கள் மத்தியில் பரீட்சையமானார் விக்னேஷ் கார்த்திக். இவரை மிகவும் பிரபலமாக்கிய திரைப்படமாக அமைந்து இந்தாண்டு வெளியான ஹாட் ஸ்பார் திரைப்படம். இந்தப் படத்தை இயக்கி பெரும் சர்ச்சைக்கும் ஆளானார்.
ரொமாண்டிக் படமாக இருந்தாலும் இளைஞர்களுக்கு ஒரு வித விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார் விக்னேஷ் கார்த்திக். இருந்தாலும் சர்ச்சைகளையும் தாண்டி இளசுகளை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில் விக்னேஷ் கார்த்திக் நடிகை பிரிகிடாவுடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதை பார்த்த அனைவரும் மனைவியை டெலிவரிக்கு அனுப்பிவிட்டு நடிகையுடன் திருமணம் செய்து கொண்டாயா? என்று கேட்டு வருகின்றனர். ஏற்கனவே விக்னேஷ் கார்த்திக் திருமணமானவர். ஒரு வேளை இது பட ப்ரோமோஷனுக்காக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் சிங்கர் சௌந்தர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் விக்னேஷ் கார்த்திக்.