Brother: பிளடி பெக்கர் இருக்கட்டும்!.. பிரதர் நிலவரம் ரொம்ப கலவரமால இருக்கு?.. தலையில் துண்டை போட்ட பிரபலம்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:34  )

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் பிரதர். ஜெயம் ரவி நடிப்பில் சற்று வித்தியாசமான படமாக இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி இருந்தது. இந்த படத்துடன் சேர்த்து சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் கவினின் பிளடி பெக்கர் திரைப்படமும் வெளியாகி இருந்தது. தீபாவளி ரேசில் முதலிடத்தை பிடித்தது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் தான்.

அதற்கு அடுத்ததாக கவின் பிளடி பெக்கர் திரைப்படம் அமைந்தது. இதில் வேற்று மொழிப்படமான லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட தமிழகத்தில் நல்ல வரவேற்பை பேசி இருந்த நிலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் தான். வெட்டு ,குத்து, அடிதடி என்று இல்லாமல் சற்று வித்தியாசமான படமாக குடும்ப ஆடியன்ஸ்களுக்கு விருப்பமான படமாக இது அமைந்திருந்தது.

வழக்கறிஞரான ஜெயம் ரவி எதுக்கு எடுத்தாலும் லாபாண்டு பேசிக்கொண்டு வீட்டில் அடங்காமல் செய்யும் சேட்டையால் மொத்த குடும்பமே பிரச்சினைக்கு ஆளாகின்றது. மேலும் அக்கா தம்பி பாசத்தை ஆழமாக கூறும் படமாகவும் இப்படம் அமைந்திருந்தது. இயக்குனர் ராஜேஷின் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ஜெயம் ரவிக்கும் இந்த திரைப்படம் ஒரு சிறந்த கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் கவிஞன் பிளடி பெக்கர் திரைப்படம் தான். இந்த படங்களுடன் இல்லாமல் வேறு ஒரு நாள் வெளியிட்டு இருந்தால் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் பிரதர் திரைப்படத்திற்கு பெரிய அளவுக்கு ப்ரமோஷன் செய்யவில்லை என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளுக்கு வெளியாகும் படங்களுக்கு பிரமோஷன் என்பது மிகவும் முக்கியம். அப்படி உள்ள நிலையில் பிரதர் திரைப்படத்திற்கு பெரிய அளவு பிரமோஷன் எதுவும் செய்யவில்லை. மேலும் படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. மொத்தமாகவே இந்த திரைப்படம் 12 கோடியை தான் வசூல் செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் 13 கோடிக்கு வாங்கி ரெட் ஜெயன்ட் மூலமாக வெளியீடு செய்தது.

இப்படத்தின் படுதோல்வி காரணமாக நான்கு கோடி ரூபாய் ஷேர் வந்தாலே மிகப்பெரிய விஷயம் என்று கூறப்பட்டு வருகின்றது. இதனால் அவர் மிகுந்த வேதனையில் இருக்கிறாராம் விநியோகிஸ்தர். மேலும் ஜெயம் ரவியின் திரைப்படங்கள் தோல்வி படங்களாகவே இருந்தால் கூட ஆறு முதல் ஏழு கோடி வரை ஷேர் கிடைக்கும்.

அப்படி இருக்கும் நிலையில் ஜெயம் ரவியின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இனிமேலாவது அடுத்தடுத்த திரைப்படங்களின் கதையை மிக கவனமாக தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள்

Next Story