அந்த படத்தோட நஷ்டம்!.. வேட்டையனுக்கு ஆப்பு ரெடி!.. விடவே மாட்டாங்க போல!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:41:12  )

Vettaiyan: ஜெயிலர் படத்துக்கு பின் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் வேட்டையன். ஜெய்பீம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தா.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். வருகிற 120ம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பின் ரஜினியும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மேலும், பாகுபலி புகழ் ராணா இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

அதோடு, மலையாள நடிகர் பகத் பாசில், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ஒரு பாடலும் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது.

இந்த படத்தில் என்கவுண்டர் பற்றிய காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கிறது. போலீசார் ஏன் என்கவுண்டர் முடிவை எடுக்கிறார்கள்?. அதற்கு பின் இருக்கும் பிரச்சனை என்ன?. என்கவுண்ட்டரால் போலீசார் சந்திக்கும் பிரச்சனை? என பல விஷயங்களை இப்படத்தில் பேசியிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த படத்திற்கு ரஜினியின் தர்பார் பட விவகாரம் தலைவலியாக வரவுள்ளது. அதாவது, லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்து சில வருடங்களுக்கு முன் வெளியான படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தனர்.

அந்த நஷ்டத்தை அவர்கள் அப்போது லைக்காவிடம் கேட்டபோது மீண்டும் ரஜினியை வைத்து படமெடுக்கும்போது நஷ்டத்தை கொடுத்துவிடுகிறோம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டதாம். தற்போது வேட்டையன் படம் வெளியாகும் நேரத்தில் கட்டையை போட வினியோகஸ்தர்கள் காத்திருக்கிறார்கள். அனேகமாக நாளை அல்லது மறுநாள் வினியோகஸ்தர்கள் இந்த பிரச்சனையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story