துல்கரை துரத்திய சிவகார்த்திகேயன்… ஜெயம்ரவியை காலி செய்த கவின்… என்னங்கப்பா நடக்குது?
Diwali Release: தீபாவளி ரிலீசில் படம் வெளியாவதற்கு முன்னரே யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்ற கணிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
பொதுவாக தீபாவளி மற்றும் பொங்கல் தினத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள்தான் வெளியாகும். ஆனால் இந்த முறை நேர் எதிராக டாப் நாயகர்கள் இல்லாமல் முன்னணி நடிகர்கள் மட்டுமே நடித்திருக்கும் திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் அமரன். இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்து ரபேக்கா வர்க்கீஸ் ஆக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோஷன்களை விட முகுந்த் வரதராஜனின் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட பலர் அமரன் திரைப்படத்திற்கான ஆவலாக காத்திருக்கின்றனர்.
இதுவே படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது. துல்கர், சிவகார்த்திகேயனை விட பிரபல நடிகர் என்பதால் அவருடைய திரைப்படத்திற்கு தான் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஃப்ரீ புக்கிங் தொடங்கி இருக்கும் நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை அமரன் திரைப்படம் ஓரம் கட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரபல டிக்கெட் தளங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அமரன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் லக்கி பாஸ்கர் 12000 டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. இதுபோல இதே ரேசில் இருக்கும் ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் திரைப்படம் அமரனை விட பின்தங்கியே இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படம் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்தாயிரத்தி ஐநூறு டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் 5200 டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டுள்ளதால் ரவியை கவின் ஓரங்கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இருந்தும் நாளை முதல் காட்சி முடிவிற்கு பின்னரை இந்த ரேஸில் யார் முந்துவார்? யார் பிந்துவார் என்பது தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.