Categories: latest news

விமர்சகர்களால் சினிமா சாகக் கூடாது!.. டிஎன்ஏ வெற்றி விழாவில் டைரக்டர் மனம் விட்டு பேசிட்டாரே!..

அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிஎன்ஏ படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்று படத்துக்கு சக்சஸ் மீட் வைத்து கொண்டாடி விட்டனர்.

நடிகர் தனுஷின் குபேரா படத்துக்கு ஞாயிற்றுக்கிழமையே ஹைதராபாத்தில் சிரஞ்சிவியை எல்லாம் அழைத்து பிரம்மாண்ட விழாவை படக்குழு நடத்தி படம் பெரிய பிளாக்பஸ்டர் என அறிவித்து விட்டனர். 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் இதுவரை 60 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதிகபட்சமாக 150 கோடி வரை வசூல் வரும் என்கின்றனர்.

அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ படத்தை இன்னொரு டூரிஸ்ட் ஃபேமிலி போல ஹிட்டாக்க விமர்சகர்கள் முயற்சித்தாலும் படத்திற்கு பெரிதாக வசூல் வரவில்லை. இதுவரை 3 கோடி ரூபாய் கூட முழுதாக வரவில்லை என்கின்றனர்.

இந்நிலையில், படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இந்த படத்துக்கு கிடைத்த விமர்சனங்கள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால், ஒரு சிலர், படத்தை ஸ்பாய்லர் செய்வதும், அதிகளவில் குறைகள் செய்து காலி செய்ய நினைப்பதும் ஏன் என்றே தெரியவில்லை.

படத்தின் நிறை குறைகளை சொல்ல விமர்சகர்களுக்கு நிச்சயம் உரிமை உள்ளது. ஆனால், எந்த எந்த படங்களுக்கு எப்படி எப்படி விமர்சனங்கள் சொல்வீர்கள், ஒரு 50 பேரோட விமர்சனத்தை பார்த்தேன். அதிலேயே ஒற்றுமையில்லையே, சினிமாவை வாழவும் வளரவும் வைக்க வேண்டியவர்கள் தான் விமர்சகர்கள். நீங்களே காலி பண்ணிடாதீங்க என பேசியுள்ளார்.

இப்படியொரு கதையை அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் தேர்வு செய்து நடித்துக் கொடுத்ததற்கு நன்றி. இதை விட இன்னமும் சிறப்பான ஒரு படத்தில் உங்களுடன் மீண்டும் இணைவேன் என்றார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago