திருநங்கையாக நடிக்க ஆசையா?- ரஜினிக்கு கோரிக்கை வைக்கும் தாதா 87 பட இயக்குனர்

தர்பார் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி ‘திருநங்கை கதாபாத்திரல் இதுவரை நடித்ததில்லை. அப்படி ஒரு வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ தனது டிவிட்டர் பக்கத்தில்  சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.. தர்பார் பட புரோமோஷன் அடுத்த பட வேலைகளுக்கு நடுவில் காலம் நேரம் ஒத்துழைத்தால் தாதா87 படத்தை காண்பிக்க தாயராக இருக்கிறோம்’ எனபதிவிட்டு ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அதில், என் முதல் படத்தில் கதாநாயகியை திருநங்கை பாத்திரமாக அமைத்திருந்தேன். எனவே, பல நடிகைகள் அதில் நடிக்க விரும்பவில்லை. தற்போது ரஜினி பேசியிருப்பதன் மூலம் நடிகைகள் அந்த வேடத்தில் நடிக்க முன் வருவார்கள். அவருக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Published by
adminram