மிஷ்கின் எப்படிப்பட்ட மனுஷன் தெரியுமா?.. அஸ்வத் மாரிமுத்து என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

by ramya suresh |
மிஷ்கின் எப்படிப்பட்ட மனுஷன் தெரியுமா?.. அஸ்வத் மாரிமுத்து என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..
X

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருந்து வருகின்றார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் ஹீரோவாக கமிட்டாகி இருக்கின்றார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் டிராகன் திரைப்படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

டிராகன் ரிலீஸ்: ஓ மை கடவுளே என்கின்ற திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபாமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் என அனைத்துமே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்த திரைப்படத்தின் கதையை பார்க்கும் போது டான் திரைப்படத்தின் கதை போல் இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில் அதற்கும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம் கொடுத்துவிட்டார்.

டிராகன் டிரைலர்: டிராகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. ஒரு கல்லூரியில் படிக்கும் அடங்காத மாணவனின் கதையை சிறப்பாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் பிரதீ ப் ரங்கநாதனுக்கு இணையாக மிஸ்கின் அவர்களின் கதாபாத்திரமும் மிகச் சிறப்பாக இருந்ததாக டிரைலரை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்,

மிஷ்கின் குறித்து அஸ்வத் விளக்கம்: சமீபத்தில் பாட்டில் ராதா என்கின்ற திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் மிஸ்கின் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தார்கள். அதன் பிறகு அவர் வேறு ஒரு நிகழ்ச்சியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக வணங்கான் திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது டிராகன் திரைப்படத்திலும் ஒரு கல்லூரி பிரின்ஸ்பல் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார்.

மிஷ்கின் குறித்து அஸ்வத் மாரிமுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது ' அவரை சமீப நாட்களாக தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர் பிறந்த நாளுக்கு படத்தில் வேலை செய்யும் மேனேஜர் முதல் கொண்டு அனைவருக்கும் பிறந்தநாள் பரிசு அனுப்பி வைத்திருந்தார். அதுதான் மிஷ்கின் சார். நாம் ஒருவரை ஈசியாக தவறாக புரிந்து கொள்ளலாம்.

உலகத்துடைய பார்வை அப்படி இருக்கின்றது. அதனை சரி செய்வதற்கு அவர் பெரிய அளவு முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. இந்த படத்தில் நான் மிஷ்கின் அவர்களை எப்படி காட்டி இருக்கிறேன் என்றால் அவருக்குள் ஒரு பயங்கரமான புத்திசாலித்தனமான ஒருத்தர் இருக்கின்றார். நான் அவரிடம் பார்த்த எல்லா நல்லவிதமான குணத்தை பார்த்து இந்த கேரக்டரை உருவாக்கியிருக்கின்றேன்.

அனைவரும் ரசிக்கும்படியான ஒரு கதாபாத்திரமாக இந்த மயில்வாகனன் கேரக்டர் இருக்கும். மிஷ்கின் அவர்களை இந்த படத்தில் மிகவும் காதலிப்பீர்கள்' என்று அவரைக் குறித்து பெருமையாக பேசி இருக்கின்றார்.

Next Story