Categories: latest news

பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பிய டிராகன்!.. 2025-ல் இப்படி ஒரு சாதனையா?…

Dragon collection: குறும்படங்களை இயக்கி வந்தவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பின் கோமாளி படம் மூலம் சினிமாவில் இயக்குனராக மாறினார். ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. படம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என ஜெயம் ரவியே எதிர்பார்க்கவில்லை.

அதன்பின் 3 வருடங்கள் கழித்து லவ் டுடே என்கிற படத்தை இயக்கி அதில் அவரே ஹீரோவாக நடித்தார். ஒரு சாயலில் தனுஷை போல இருக்கும் பிரதீப் நடிப்பிலும் தனுஷை ஞாபகப்படுத்தினார். எனவே, இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இப்போதுள்ள காலத்தில் காதலை எப்படி கையாளுகிறார்கள் என்பதை கச்சிதமாக காட்டியிருந்தார்.

மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி 2022ம் வருடம் வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற படம் என்கிற பெருமை இப்படத்திற்கு கிடைத்தது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, இவரை வைத்து படமெடுக்க மற்ற இயக்குனர்கள் முன் வந்தார்கள்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் போன்ற படங்களில் நடிக்க துவங்கினார். இதில், டிராகன் படம் முதலில் வெளியானது. இந்த படத்தில் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

கல்லூரியில் பொறுப்பின்றி சுத்தும் ஒருவன் மோசடி செய்து ஒரு நல்ல இடத்திற்கு போகிறான். அந்த உண்மை வெளியே தெரியவர என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் விமர்சனம் எழுந்ததால் பலரும் சென்று படத்தை பார்த்தார்கள். இதன் காரணமாக டிராகன் படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. இந்தியாவில் மட்டுமே இப்படம் 95 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இது இல்லாமல் தெலுங்கு, கேரளா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் எல்லாம் சேர்த்து எப்படியும் 130 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் என கணிக்கப்படுகிறது.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் மொத்த வசூலை மூன்றே வாரத்தில் டிராகன் முறியடித்துவிட்டது. அதோடு, 2025ம் வருடத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற பெருமையையும் டிராகன் பெற்றிருக்கிறது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago