எப்படி கேட்டாலும் சொல்ல மாட்டேன்!.. டிராகன் படம் வேறமாறி!. ஹைப் ஏத்தும் அஸ்வத் மாரிமுத்து!...
Ashwath Marimuthu: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் டிராகன் திரைப்படத்தின் கதை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ரியாக்ஷன் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கியிருக்கிறார் அஸ்வத் மாரி முத்து. இப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. லவ் டுடே வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனின் படம் என்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவு ட்ரோல் கன்டென்ட் ஆக மாறியது.
இன்ஜினியரிங் படிக்கும் மாணவராக பிரதீப் ரங்கநாதன் அரியர் வைப்பது குறித்து பெருமையாக பேசி நடித்திருப்பார். இதை பார்த்த ரசிகைகள் கூட இதெல்லாம் பெருமையே இல்லை. அவர் பேச்சைக் கேட்டால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும். மெடல் வாங்கி பாஸ் ஆனவர்கள் கூட தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
இப்படி அரைவேக்காட்டு தனமாக பேசும் நடிகர்களை நம்ப வேண்டாம். இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள் டிராகன் திரைப்படத்தின் டிரைலருக்கு வந்தது. இந்நிலையில் படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் பிரபல யூட்யூப் நிகழ்ச்சியான மொட்டை மாடி பார்ட்டியில் விஜே சித்துவுடன் கலந்து கொண்டனர்.
அப்பொழுது இயக்குனர் அசோக் மாரி முத்துவிடம் டிராகன் திரைப்படம், டான் படமா? இல்லை மீசைய முறுக்கு திரைப்படமா? என விஜே சித்து வரிசையாக கேள்வி எழுப்பினார். ஆனால் அசோக் மாரிமுத்து கொஞ்சமும் பிசிறு தட்டாமல், நாங்கள் டிரைலரில் காட்டி இருப்பது பத்து சதவீதம் தான்.
மற்றதை ரசிகர்கள் நேரடியாக திரையரங்குகளில் வந்து பார்த்து ரசிக்கும்படியாக சஸ்பென்ஸாக வைத்திருக்கிறோம். இப்போது அதை சொல்ல முடியாது என்றார். தொடர்ந்து இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், ஓவரா பில்டப் கொடுக்காமல் இருப்பதே நல்லது எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.