Categories: Cinema News latest news

எல்லாமே காசு கொடுத்த பாசிட்டிவ் ரிவியூதானா? வசமாக சிக்கிய டிராகன் படக்குழு.. அதானே!

Dragon: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இன்று வெளியான டிராகன் திரைப்படத்திற்கு காலையிலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே குவிந்து வரும் நிலையில் தற்போது இது குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் திரைப்படம் டிராகன். இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல் இன்னொரு வெற்றி படமான ஓ மை கடவுளை திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படம் இன்று காலை வெளியானதிலிருந்து தொடர்ச்சியாக பாஸிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே குவிந்து வருகிறது.

பொதுவாக ஒரு திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளியாகும் போது முதலில் பாதிக்கு பாதி நெகட்டிவ் விமர்சனங்களும் வருவது வழக்கம்தான். அது மட்டுமல்லாமல் படத்திலிருந்து சஸ்பென்ஸ்கள் மொத்தமாக எக்ஸ் வலைதளத்தில் உடைக்கப்பட்டு விடும்.

ஆனால் இரண்டு மூன்று ஷோக்களை கடந்தும் இதுவரை டிராகன் திரைப்படத்தின் எந்த ஒரு காட்சியும் இணையதளங்களில் வெளியாகவில்லை. அது மட்டும் அல்லாமல் படத்தில் கிளைமாக்ஸில் வரும் ஸ்பெஷல் கேமியோ யார் என்ற தகவலும் தற்போது வரை கசியவில்லை.

படம் பார்த்து ரிவ்யூ எழுதிய பெரும்பாலானோர் அதை ஸ்பெஷல் கேமியோ என்று தான் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து பார்க்கும்போது சாதாரண ரசிகர்கள் கண்டிப்பாக இதை எழுதியிருந்தால் அந்த கேமியோ யார் என்ற விஷயத்தையும் குறிப்பிட்டு இருப்பார்கள்.

ஆனால் இந்த படத்தில் இதுவரை விமர்சனம் செய்தவர்கள் எல்லோருமே காசு வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்ததாக தான் தற்போது வரை தகவல் வெளியாகி வருகிறது. இருந்தும் சிலர் அந்த ஸ்பெஷல் கேமியோ பெரிய பிரபலம் இல்லை ஆனால் படத்துடன் நிறைய கனெக்ட் ஆகி இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து பார்க்கும்போது அந்த பிரபலம் நடிகை இவானாவா இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் யுகம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த சஸ்பென்ஸ் தொடருமா? இல்லை சில ஷோக்களில் உடைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
ராம் சுதன்