Categories: Cinema News latest news

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்காக எண்ட்ரி கொடுத்த டாப் பிரபலம்… இவருக்கு என்ன இதே வேலையா போச்சா?

Dude: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டியூட் படத்தில் கோலிவுட்டின் டாப்ஹிட் நட்சத்திரம் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில் அதற்கான வீடியோ ஆதாரமும் வெளியாகி உள்ளது.

கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் படங்கள் தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் அடித்து வருகிறது. லவ் டுடே வெளியாகி ஹிட் அடித்த நிலையில் டிராகன் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் டாப் ஹிட் அடித்து ஆச்சரியப்படுத்தியது.

இதனால் பிரதீப் ரங்கநாதனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில் பிரதீப் ரங்கநாதன் எல்ஐகே படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தின் கதை வைரலாகி வரும் நிலையில் படத்தின் ரிலீஸுக்கும் பலர் காத்திருக்கின்றனர்.

இப்படம் மட்டுமல்லாமல் டியூட் படமும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் மமிதா பைஜூ அவருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தினை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் டியூட் படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்து இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இருவரும் மழையில் நனைந்து பஸ் ஸ்டாண்டில் நிற்கும் காட்சியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே கோட் படத்தில் ஒரு சின்ன காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்து ஆச்சரியப்படுத்தினர். தற்போது மீண்டும் இப்படி ஒரு ரோலில் அவர் நடிப்பது பலரை வாவ் சொல்ல வைத்து இருக்கிறது.

Published by
ராம் சுதன்