Categories: Cinema News latest news

மமிதா மைஜூ பிறந்தநாளுக்கு டியூட் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்

தமிழ் திரையுலகில் வேகமாக முன்னேறி வருபவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி தற்போது வெற்றிகரமான நடிகராக வலம் வந்துகொடிருக்கிறார். இவர் நடித்த லவ் டுடே ம்னற்றும் டிராகன் ஆகிய இரு பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் அஜீத் நடித்த குட் பேட் அக்லி படத்தயாரிப்பு நிறுவனமான மைதிரி பிச்சர்ஸ் தயாரிப்பில் டியூட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டியூட் படத்தில் பிரதீப் ஜோடியாக மமிதா பைஜூ நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்த பிரேமலு படத்தில் நாயகியாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

mamitha baiju

இந்த நிலையில் மமிதா பைஜூ பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக டியூட் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் மமிதா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றன்ர்.

Published by
ராம் சுதன்