ஜோதிகா செய்த வேலை.. மூக்கறுபட்ட சிவக்குமார்! என்ன மேட்டர் தெரியுமா?

by ராம் சுதன் |

தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஜோதிகா. 2000களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக இருந்த ஜோதிகா கோலிவுட்டின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் எந்த நடிகருடன் நடித்தாலும் அவர்களுக்கிடையே இருக்கும் கெமிஸ்ட்ரி ரசிக்கும் படியாகவே அமைந்தது.

ஏன் வயதில் இளையவரான சிம்புவுடனும் நடித்தார் ஜோதிகா. சரவணா படத்தில் இவர்களுக்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரி அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே அமைந்தது. இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமணத்திற்கு சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தாலும் நீண்ட ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் ஜோதிகாவை சூர்யா பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தமிழ் நாட்டின் மருமகள் போலவே மாறினார். மும்பையை சேர்ந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு குடும்ப குத்துவிளக்காக மாறினார். இவருடைய இந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் அனைவரையும் ஈர்த்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமலேயே இருந்தார். ஆனால் இரு குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

அதுவும் தமிழிலேயே நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலேயே நடித்து வந்தார். அதனை எடுத்து மலையாளம், அடுத்து ஹிந்தி என இப்போது பிஸியான நடிகையாக மாறியிருக்கிறார். அதுவும் சமீபத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த ஆடை பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக ஜோதிகாவின் மீது அனைவரின் பார்வை திரும்பியிருக்கிறது.

இதை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சேகுவாரா கூறுகையில் ‘ஏன் அந்த கோட்-ஐ பட்டன் போட்டு வரக் கூடாதா? போடலைனா விழாவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? ஹிந்தியில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து ஜோதிகா கவர்ச்சிக்கு இறங்கிவிட்டார்.சமீபத்தில் வெளியான சைத்தான் படத்தில் கூட நீச்சல் குள காட்சியில் நடித்திருந்தார்.’

‘ஒழுக்கத்திற்கு பேர் போன நடிகர் சிவக்குமார். அவரெல்லாம் இதை பற்றி இப்போது கேட்க மாட்டாரா? ஒரு பெரிய நடிகர். அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில்தானே ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தனர். அவர்களின் போனை வாங்கி தூக்கிப் போட்டவர் ஜோதிகாவின் இந்த செயலுக்கு என்ன செய்யப் போகிறார்?’

‘தமிழ் நாட்டின் மருமகளாகவே பார்க்கப்பட்டவர் ஜோதிகா. இங்கு இருக்கிற வரைக்கும் தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான சேலையிலேயே அவரை பார்க்க முடிந்தது. மற்றவர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்தார்.அவரை இப்போது இந்த மாதிரியான உடையில் பார்க்கும் போது கூச்சமாக இருக்கிறது.’ என பத்திரிக்கையாளர் சேகுவாரா கூறியிருக்கிறார்.

Next Story