பிளடி பெக்கரை ஓரங்கட்டிய லக்கி பாஸ்கர்... முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா...?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:45  )

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம், கவினின் பிளடி பெக்கர் திரைப்படம், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய ரிலீஸாகி இருந்தன. இந்த மூன்று படங்களுமே தமிழ் இயக்குனர்களால் இயக்கப்பட்ட திரைப்படம். பிறமொழிப் படமாக தீபாவளி ரேஸில் இணைந்த படம் தான் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்.

பிரபல தெலுங்கு இயக்குனரான வெங்கி அத்லுரி இயக்கத்தில் தெலுங்கு படமாக உருவான இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் ஏற்கனவே அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்களுக்கு திரைகள் ஒதுக்கப்பட்ட காரணத்தால் லக்கி பாஸ்கர் படத்திற்கு குறைந்த அளவு திரையரங்குகளே ஒதுக்கப்பட்டன.

துல்கர் சல்மான் இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூட எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஆதங்கத்துடன் பேசி இருந்தார். குறைவான திரையரங்குகளில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியான போதிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது சக்க போடு போட்டு வரும் திரைப்படம் சிவகார்த்திகேயனின் அமரன்.

இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து இருப்பதால் ரசிகர்கள் அமரன் திரைப்படத்திற்கு படையெடுத்து வருகிறார்கள். அடுத்ததாக பிளடி பெக்கர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால் லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகச்சிறந்த படமாக இருந்ததாக பத்திரிக்கையாளர்களும் சினிமா விமர்சகர்களும் கூறி வருகிறார்கள்.

குறைந்த திரையரங்குகளில் வெளியான போதும் லக்கி பாஸ்கர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளி ரேஸில் இந்த திரைப்படம் கட்டாயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். அதாவது ஒரு வங்கியில் கேஷியராக பணியாற்றி வரும் பாஸ்கரன் என்கின்ற துல்கர் சல்மான் நிதி நெருக்கடி காரணமாக நேர்மை தவறி பண மோசடியில் ஈடுபட்டு கோடீஸ்வரன் ஆகின்றான்.

அதற்குப் பிறகு அதனை எப்படி சரி செய்கின்றான் என்பதை விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இதில் துல்கர் சல்மானின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் மீனாட்சி சவுத்ரி இப்படத்தில் மிகச் சிறப்பாக தனது கதாபாத்திரத்தை நடித்திருக்கின்றார். 70 கோடி பொருட்ச் செலவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 12.7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த திரைப்படத்தின் வசூல் நடிகர் கவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் பிளடி பெக்கர் திரைப்படத்தின் வசூலை விட அதிகம் என்று கூறி வருகிறார்கள். எனவே வரும் நாட்களில் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி செய்யும் பட்சத்தில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

Next Story