எனக்கு திமிரெல்லாம் இல்லைங்க!.. தக் லைஃப் படத்தை மிஸ் செய்ய இதுதான் காரணம்!.. துல்கர் சல்மான் ஓபன்!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:24  )

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் இந்த ஆண்டு விஜய் நடித்த கோட் படத்துடன் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கேரளாவில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களை கருத்தில் கொண்டு அந்த ரிலீஸ் தேதியை பின்னர் தள்ளி வைத்தனர்.

துல்கர் சல்மான் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. கேரளாவிலேயே விஜயின் கோட் திரைப்படம் பெரிதாக வசூல் செய்யவில்லை. இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார் துல்கர் சல்மான். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார்.

படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்த துல்கர் சல்மான் தனது உடல்நிலை சில மாதங்கள் சரியாக இல்லை என்றும் அதன் காரணமாக சில பெரிய படங்களை தவற விட்டுள்ளேன். மற்றபடி கால்ஷீட் பிரச்சனையோ அந்த படம் பிடிக்காமலோ வெளியேறவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

சூர்யாவின் 43-வது படத்திலும் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான் அந்த இரு படங்களிலிருந்தும் வெளியேறியதற்கு காரணம் அவரது உடல்நிலை தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். துல்கர் சல்மான் உடலுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் தற்போது நலமுடன் உள்ளாரா? பூரணமாக குணமாகி விட்டதா என ரசிகர்கள் அக்கறையுடன் விசாரித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 31-ம் தேதி தமிழில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் என மூன்று படங்கள் வெளியாக உள்ள நிலையில், நான்காவது படமாக லக்கி பாஸ்கர் திரைப்படமும் போட்டிக்கு வந்துள்ளது.

Next Story