என்னை கூப்பிட்டா உண்மையை சொல்லிடுவேன்.. நிறைய மைனஸ் இருக்கு.. சூர்யாவை பற்றி ராதாரவி பளீச்

by ராம் சுதன் |

இன்று கோலிவுட்டில் விஜய் அஜித்துக்கு பிறகு அவர்களுக்கு இணையான ஒரு புகழைக் கொண்ட நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கும் சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் அவருடைய சினிமா கெரியரை ஆரம்பித்திருக்கிறார் சூர்யா.

சமீபத்தில்தான் சூர்யா அவருடைய 49வது பிறந்த நாளை கொண்டாடினார். அதுவும் அவருடைய ரசிகர்கள் பல இடங்களில் இரத்ததானம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நடிகர்களிலேயே சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள்தான் தன்னுடைய ரசிகர்கள் மூலம் சமூகத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்களை செயல்களை செய்து வருகின்றனர்.

சூர்யாவை பொறுத்தவரைக்கும் ஆரம்பகாலத்தில் சினிமாவே என்ன என்பது பற்றி தெரியாது. நடிக்க தெரியாது, ஆட தெரியாது. ஒரு வசனத்தை சரியாக பேசக் கூட தெரியாது. ஆனால் இப்பொழுது ஒரு தயாரிப்பாளராக மல்டி டேலண்ட் உள்ள நடிகராக இன்று மாறியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ராதாரவி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது எந்தவொரு நடிகர் பிறந்த நாள் விழாவுக்கு ராதாரவி செல்வதே இல்லையாம். ஆனால் சூர்யாவின் விழாவிற்கு வந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணமே சூர்யாவை மிகவும் பிடிக்குமாம். பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் போது சூர்யா டான்ஸ் ஆட மிகவும் சிரமப்பட்டார் என கூறிவிட்டு நான் எல்லாத்தையும் சொல்கிறவன். இப்படி சொல்றாரேனு தப்பா நினைக்காதீங்க என கூறினார்.

அந்தப் படத்தில் விஜய் சிறப்பாக ஆடியிருப்பார். ஆனால் சூர்யாவுக்கு ஆடவே வரல. உடனே சூர்யாவை அழைத்து ‘சூர்யா. நீ சிவக்குமார் அண்ணன் மகன்டா. ஆட வரலனு நினைக்காத. உன்னால முடியும். வருங்காலத்தில் தமிழ் சினிமாவே தேடப்படும் நடிகராக மாறுவாய்’ என கூறினாராம்.

அவர் சொன்னதை போல இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகராக மாறியிருக்கிறார் சூர்யா. மேலும் சூர்யா குமுதம் பத்திரிக்கையில் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்தாராம். அதில் ராதாரவி சொன்ன விஷயத்தையும் சூர்யா பகிர்ந்திருந்தாராம். இதையும் ராதாரவி ‘இதை சொல்றதுக்கு ஒரு தைரியம் வேண்டும். எந்தவொரு நடிகரும் இப்படி சொல்லமாட்டாங்க. நான் சொன்னதா அந்த தொடரில் எழுதியிருந்தார் சூர்யா’ என புகழ்ந்து பேசினார் ராதாரவி

Next Story