ரஜினியோட பொருள எடுத்து அவரையே போட்டார் ஞானவேல்!.. நீதிபதி சந்துரு பேட்டி!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:17  )

Vettaiyan: சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகராக, சூப்பர்ஸ்டாராக வலம் வருப்பவர் ரஜினிகாந்த். பல வருடங்களாக அவரின் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இவருக்கும் இருக்கும் மாஸ் இன்னமும் குறையவில்லை. உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரஜினியின் புதிய படம் வெளியாகும்போது ஜப்பாலினிருந்து கூட சென்னை வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கூட ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை அவரால் கொடுக்க முடிகிறது. ரஜினிக்காக உயிரை விடும் ரசிகர்கள் கூட இருக்கிறார்கள். அதனால்தான் 73 வயதாகியும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் ரஜினி.

ஜெயிலர் ஹிட்டுக்கு பின் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு, இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஒருபக்கம், ரஜினிக்கு என தனி சித்தாந்தம் உண்டு, அரசியல் பார்வை உண்டு, சர்ச்சையான விஷயத்தில் அவருக்கு ஒரு பார்வை உண்டு. சில சமயம் சர்ச்சையான விஷயங்களில் கருத்து சொல்லி சர்ச்சையிலும் அவர் சிக்குவதுண்டு.

அதில் ஒன்றுதான். சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடியபோது போலீசார் 13 அப்பாவி பொதுமக்களை சுட்டி கொன்றனர். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால், போலீசார் செய்த அந்த என்கவுண்டரை ரஜினி ஆதரித்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து சொன்னார்.

சமூக விரோதிகள் உள்ளே நுழைந்ததனர், போலீசார் மீது அவர்கள்தான் முதலில் தாக்குதல் நடத்தினார்கள் என ஏதேதோ சொன்னார் ரஜினி. ரஜினியின் அந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது வெளியாகியுள்ள வேட்டையன் படத்தில் என்கவுண்டர் செய்வது தவறு என பேசியிருக்கிறார் ரஜினி.

இந்நிலயில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ஊடகமொன்றில் பேசியபோது ‘ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி பேசினார். ஆனால், அவரை வைத்தே என்கவுண்ட்டருக்கு எதிராக பேச வைத்துவிட்டார் இயக்குனர் ஞானவேல்’ என கூறியிருக்கிறார்.

காலா படத்தில் ரஞ்சித்தும் இதையேதான் செய்திருந்தார். ஒரு குறிப்பிட்ட அரசியல்கட்சிக்கு ஆதரவாக பேசிய ரஜினியை அந்த கட்சியினருக்கு எதிராக சண்டை செய்வது போல காட்டியிருந்தார். ரஜினியும் அதை ஏற்றுகொண்டு நடிக்கிறார் என்றால் அதை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

நீதிபதி சந்துருவின் வேடத்தில்தான் சூர்யா ஜெய்பீம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story