நாங்க மட்டும்தாங்க இருக்கோம்… ஆர்வத்த அடக்குங்க… சிம்பு இயக்குனரின் தடாலடி ட்வீட்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:54  )

Ashwath: நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படமான இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அடுத்தக்கட்ட அப்டேட் குறித்து பரபரப்பாக ட்வீட் போட்டு இருக்கிறார்.

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. அசோக்செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் கேமியோ மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

இதை தொடர்ந்து இப்படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்தார். தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.

இருந்தும் அஷ்வத் தன்னுடைய அடுத்த ஹீரோ சிம்புதான் என்பதில் முடிவாக இருந்தனர். பெரிய போராட்டத்துக்கு பின்னர் தற்போது நடந்துள்ளது. இதற்கான முதல் அறிவிப்பிலேயே தம், மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயாவை கென் சியில் கலந்து செய்த நம்ம நெக்ஸ்ட் என ஆச்சரியம் கொடுத்தார்.

இதை தொடர்ந்து விண்டேஜ் சிம்பு லுக்கில் அவருடைய அக்மார்க் கை சிக்னலில் வெளியிடப்பட்ட போஸ்டர் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை அஷ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் படக்குழு குறித்து கிசுகிசுப்புகள் கசிந்த நிலையில் தற்போது அஷ்வத் மாரிமுத்து ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அதில், நான், எஸ்டிஆர் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்ஸை தவிர வேறு யாரும் இன்னும் முடிவாகவே இல்லை.

அது நடக்கும் போது சொல்லும் முதல் ஆளாக நாங்க தான் இருப்போம் எனவும் தெரிவித்து இருக்கிறார். ரசிகர்களோ இப்படி போஸ்ட்டை போட்டு கடுப்பாக்காம படத்தை உடனே தொடங்குங்க எனவும் கலாய்த்து வருகின்றனர்.

Next Story