நாகர்ஜூனாவை தொடர்ந்து ‘கூலி’ படத்தில் விலகிய அடுத்த நடிகர்! இது ஒரு பிரச்சினையா?
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் சமீபத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்தியன் 2 திரைப்படம் ஏமாற்றியது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதுவும் ஷங்கர் கெரியரில் மிகுந்த விமர்சனத்திற்கு ஆளான படமாகவும் இந்தியன் 2 திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில் அடுத்ததாக ரஜினியின் வேட்டையன் திரைப்படம் , அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் என அடுத்தடுத்த ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தே காத்திருக்கின்றன.
அதுவும் ஜெய்பீம் என்ற ஒரு மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு நேராக த.ச.ஞானவேல் இயக்கும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது.
அதனால் ரஜினியை வைத்து என்ன மாதிரியான கதையை ஞானவேல் கொடுக்கப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் திரைப்படம் கூலி.
கூலி படத்தை லோகேஷ் இயக்க படம் ஒரு பக்கா ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் டைட்டில் டீசரே வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் வைத்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? என்பதை பற்றி பல செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தன.
முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரஜினிக்கு வில்லன் என்றதும் நாகர்ஜூனா நடிக்கமாட்டேன் என்று சொன்னதாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது கிடைத்த தகவலின் படி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் ஃபகத் பாசில் நடிப்பதாக இருந்ததாம்.
ஃபகத்தும் லோகேஷுக்கும் பிரச்சினையா? அல்லது புரடக்ஷன் தரப்பில் ஃபகத்துடன் பிரச்சினையா என்று தெரியவில்லை.ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாகத்தான் ஃபகத் பாசில் இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார் என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.