Categories: latest news

நாகர்ஜூனாவை தொடர்ந்து ‘கூலி’ படத்தில் விலகிய அடுத்த நடிகர்! இது ஒரு பிரச்சினையா?

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் சமீபத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்தியன் 2 திரைப்படம் ஏமாற்றியது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுவும் ஷங்கர் கெரியரில் மிகுந்த விமர்சனத்திற்கு ஆளான படமாகவும் இந்தியன் 2 திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில் அடுத்ததாக ரஜினியின் வேட்டையன் திரைப்படம் , அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் என அடுத்தடுத்த ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தே காத்திருக்கின்றன.

அதுவும் ஜெய்பீம் என்ற ஒரு மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு நேராக த.ச.ஞானவேல் இயக்கும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது.

அதனால் ரஜினியை வைத்து என்ன மாதிரியான கதையை ஞானவேல் கொடுக்கப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் திரைப்படம் கூலி.

கூலி படத்தை லோகேஷ் இயக்க படம் ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் டைட்டில் டீசரே வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் வைத்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? என்பதை பற்றி பல செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரஜினிக்கு வில்லன் என்றதும் நாகர்ஜூனா நடிக்கமாட்டேன் என்று சொன்னதாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது கிடைத்த தகவலின் படி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் ஃபகத் பாசில் நடிப்பதாக இருந்ததாம்.

ஃபகத்தும் லோகேஷுக்கும் பிரச்சினையா? அல்லது புரடக்‌ஷன் தரப்பில் ஃபகத்துடன் பிரச்சினையா என்று தெரியவில்லை.ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாகத்தான் ஃபகத் பாசில் இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார் என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago