கவுண்டமணியோட உண்மையான குணம் இதுதான்... யாரு சொல்றாங்கன்னு பாருங்க

சாய் ராஜகோபாலன் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ஒத்த ஓட்டு முத்தையா. இதையொட்டி அவரைப் பற்றிய செய்திகளாக பல யூடியூப் சேனல்கள் மற்றும் மீடியாக்களில் வலம் வருகின்றன. படத்தில் நல்ல மெசேஜ் இருக்கு. ஆனா கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பைட் எல்லாம் தேவையா: கவுண்டமணிக்குப் படத்தில் பைட் வைத்துள்ளார்கள். அவரே தள்ளாடுகிறார். பாவம் இந்த வயதில் பைட் எல்லாம் தேவையான்னு சக நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரெங்கநாதன் கமெண்ட் அடித்துள்ளார்.
செந்தில் ஜோடி: கவுண்டமணி திரையுலகில் நுழைந்து பல தசாப்தங்களாக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். இவருடன் செந்தில் ஜோடி சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான். போதும் போதும் என்று சொல்லும் அளவுக்குக் காமெடிக்கு பஞ்சமிருக்காது. கவுண்டமணியின் பிளஸ் பாயிண்டே அவர் கவுண்டர் கொடுத்துப் பேசுவதுதான்.
கவுண்டர் கொடுக்கும் கவுண்டமணி: அது அவரது வாயிலிருந்து சரளமாக வந்து கொண்டே இருக்கும். யோசிக்கவே மாட்டார். மனுஷன் பிச்சி உதறுவார். பக்கத்தில் இருப்பது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி. மனதில் பட்ட கவுண்டரைக் கொடுக்கத் தயங்க மாட்டார். அதுதான் அவருக்கு இவ்ளோ பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது என்றே சொல்லலாம்.
ஜென்டில்மேன்: கவுண்டமணி குறித்து அவர் காலகட்டத்தில் நடித்த சகநடிகரான ஜனகராஜ் ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். கவுண்டமணியின் உண்மையான குணம் என்ன? அவர் எப்படிப்பட்டவர்னு சொல்லிருக்கார் பாருங்க.
கவுண்டமணி அண்ணன் ஜென்டில்மேன். எப்படின்னா அவரு உண்டு. அவர் வேலை உண்டு. நடிக்கிறார்தான். கூட நடிக்கிறார். அப்போ என்னென்னமோ பேசுவாரு. அப்போ கவர வேண்டி இருக்குறதால என்ன வேணாலும் வரும்.
ஓபன் டைப்: ஆனா இந்த பின்னாடி பேசறது, மத்தவங்க மாதிரி 'ஐயய்யோ இப்படி ஆகிப்போச்சே, அப்படி பண்ணிட்டான்'னு அந்த மாதிரி எல்லாம் கிடையாது. ஓபன் டைப். எதுவா இருந்தாலும் ஓபனா சொல்வாரு. அவருக்கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம். சேர்ந்து ஒர்க் பண்ணினாருன்னா ஜாலியா இருக்கும் என்கிறார் காமெடி நடிகர் ஜனகராஜ்.