பாட்டு பாடி அஜித்தை இம்ப்ரஸ் பண்ண ரசிகர்.. கூடவே இன்னொரு சர்ப்ரைஸ்.. க்யூட் வீடியோ..!

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளுக்கு சென்றாலும் இவரின் ரசிகர்களின் அன்பு தொல்லை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தற்போதைக்கு அஜித் ரசிகர்கள் அனைவரும் இவரின் திரைப்படத்திற்காக ஆவலாக காத்திருக்கிறார்கள். கடந்த 2 வருடங்களாக நடிகர் அஜித் நடிப்பில் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை.
இது அஜித் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருப்பது சற்று ஆறுதலை கொடுத்திருக்கின்றது. துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை கடந்த இரண்டு வருடங்களாக இயக்கி வந்தனர். இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி இருக்கும் நிலையில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கின்றது.
பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே ஒரு வழியாக கடந்த டிசம்பர் மாதம் படத்தை முழுவதுமாக எடுத்து முடித்து விட்டார்கள். அதன்படி பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 6 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பையும் ஒருசேர முடித்து விட்டார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. இரண்டு திரைப்படங்களையும் பேக் டூ பேக் முடித்ததற்கு கார் பந்தயம் தான்.
உடல் எடையை குறைத்து ஐரோப்பியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு தன்னை முழுமையாக தயார்படுத்தி இருக்கின்றார் நடிகர் அஜித். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியிருந்தார். இந்த வருடம் முழுவதும் நடிகர் அஜித் கார் பந்தயத்தில் முழு கவனத்தையும் செலுத்த இருக்கின்றார். இந்த வருடம் அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் இரண்டு திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
பொதுவாக நடிகர் அஜித் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது கிடைக்கும் நேரங்களில் பைக்கை எடுத்துக் கொண்டு வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்வார். அவருக்கு பயணம் செய்வது என்பது மிகவும் பிடிக்கும். அவர் செல்லும் இடங்களில் அவரின் ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் வீடியோ போன்றவை எடுப்பதை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது கார் பந்தயத்திற்கு துபாயில் தங்கியிருக்கும் நடிகர் அஜித்தை ஒரு ரசிகர் பாட்டு பாடி வியக்க வைத்திருக்கின்றார்.
துபாயில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நடிகர் அஜித்தை சந்தித்த அவரின் ரசிகர் ஒருவர் அஜித் திரைப்படத்திலிருந்து 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என்கின்ற பாடலை மிகப் பிரமாதமாக பாடினார். அதனை அஜித் மெய் மறந்து கேட்டார். அதனை தொடர்ந்து அவரை கட்டி அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து உங்கள் பெயர் என்ன? என்று கேட்டதும் அவர் அஜித் என்று சொன்னவுடனே சர்ப்ரைஸான அஜித் க்யூட்டான ரியாக்சன் கொடுத்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.