ராயன் வேஸ்ட்!. ஏ.ஆர்.ரஹ்மான்தான் மாஸ்!.. ஃபேன்ஸ் என்ன சொல்றாங்க வாங்க பார்ப்போம்!...
தனுஷின் 50வது திரைப்படமாக வெளிவந்திருக்கிறது ராயன். சில வருடங்களுக்கு முன்பு பவர் பாண்டி என்கிற படத்தை இயக்கிய தனுஷின் 2வது இயக்கம் இது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க அவரின் தம்பிகளாக சந்தீப் கிஷனும், காளிதாஸ் ஜெயராமனும் நடித்திருக்கிறார்கள்.
தனுஷுக்கு துஷரா விஜயனும், சந்தீப் கிஷனுக்கு அபர்ணா பாலமுரளியும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். மேலும், சரவணன், எஸ்.ஜே.சுர்யா, நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ராயன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
தனுஷின் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில், வெட்டு, குத்து என ரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், பொதுவான ரசிகர்கள் இப்படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதில் பலரும், ராயன் படத்தில் ஒன்றுமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான்தான் நம்மை காப்பாற்றுகிறார் என பதிவிட்டு வருகிறார்கள்.படத்தின் பார்த்த சிலர் ‘ராயன் முதல் பாதியில் பெரிய பாய் சம்பவம் பண்ணி இருக்கார். சூப்பர் பின்னணி இசை. அவரின் சமீபத்திய படங்களில் ராயன் பெஸ்ட்’ என பதிவிட்டிருக்கிறார்கள்.
சிலரோ, படத்தின் இடைவேளை காட்சி கூஸ்பம்ஸாக இருக்கிறது. தனுஷ் மாஸ் காட்டுகிறார். இரண்டாம் பாதியில் சில படங்களில் தொய்வு இருந்தாலும் ரஹ்மானின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. இந்த படம் கண்டிப்பாக 100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
ராயன் படத்திற்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது. வார் இறுதியான சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களிலும் இப்படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. ராயன் படத்தின் வசூல் திரையுலகினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.